உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சுந்தரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தானியங்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சுந்தர், தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி முடிவுகளில் பல துறை வாரியாகவும், துறைக்கு பல சொற்கள் comma குறிகளால் பிரிக்கப்பட்டும் மொத்தமாக அட்டவணை வாரியாகத் தரப்படுகின்றன. ஒவ்வொரு rowவிலும் ஒரு துறையும் அத்துறையில் அச்சொல்லுக்கான மொழிபெயர்ப்புகளும் தரப்படுகின்றன. அவற்றை தனித்தனியாகப் பிரித்து வார்ப்புரு பக்கத்தில் உள்ளது போன்ற வடிவமைப்பில் பக்கத்தை உருவாக்கலாம். அனைத்துச் சொற்களும் பெயர்ச்சொற்கள் தான் என உறுதி செய்து கொண்டு விட்டால், ஆங்கில விக்சனரியில் சொல் வகையைத் தேடுவதை விட்டு விடலாம். பிற மொழிச் விக்சனரிகளுக்கான இணைப்பையும் கட்டுரை அடியில் தரலாம். தரா விட்டாலும் பாதகமில்லை. பிற விக்சனரியிடை தானியங்கிகள் கவனித்துக் கொள்ளும். --ரவி 16:42, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி. ஓரிரண்டு இடங்களில் உரிச்சொற்களைப் பார்த்த நினைவு. முடிந்தால் ஆங்கில விக்கியில் இருந்து பெற முயற்சிக்கிறேன். இல்லாவிட்டால் அத்தகவலை விட்டுவிடுகிறேன். ஒரு கோப்பில் பிற தகவல்களை இட்டு விடுகிறேன்; பயனர்கள் உரிச்சொற்களை மட்டும் சுட்டட்டும். ஒலிப்புமுறை விளக்கத்திற்கு ஆங்கில விக்கியை நாடத்தானே வேண்டியுள்ளது? பிற மொழி இணைப்புகளைப் பொருத்தவரை நீங்கள் குறிப்பிட்டபடி பிற தானியங்கிகள் மேற்கொள்ளட்டும். மேலும், இவற்றின் துணைகொண்டு பட்டியல்களும்கூட உருவாக்க முடியும். விரைவில் வேலையைத் துவக்குகிறேன். -- Sundar 17:02, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

Start a discussion about வார்ப்புரு:சுந்தரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தானியங்கி

Start a discussion