வாலாட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாலாட்டல்

சொல் பொருள் விளக்கம்

“என்னிடம் வாலாட்டினால் ஒட்ட வெட்டிவிடுவேன்” என்பது வழக்குச் சொல். வால் இல்லாதவன் வாலாட்டுவானா? இல்லாத வாலை வெட்டுவதுதான் எப்படி? வாலாட்டுதல் நாய் வேலை. வால் நீட்டல் நரிவேலை. குரங்கும் வாலையாட்டும். இங்கே வால் நாய், நரி வால்களை நீக்கிக் குரங்கு வாலைக் குறித்ததாம். குரங்கின் இயல்பு குறும்பு. அதன் வாலாட்டம் என்பது குறும்பு செய்தலே. என்னிடம் குறும்பு செய்தால் அதனை அறுக்க எனக்குத் தெரியும் என்பதே வாலாட்டினால் ஒட்டத் தரிப்பேன் என்பதாம். “பெரிய வால்” என்று ஒருவரைச் சுட்டினால் அவர் செருக்கானவர் என்பது குறிப்பு. என்னிடம் வாலாட்டாதே என்றால் என் செயலில் தலையிடாதே என்பது பொருளாம். தலையும் வாலும் மாறிக் கிடக்கும் நிலை இது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலாட்டல்&oldid=1912987" இலிருந்து மீள்விக்கப்பட்டது