உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:ஒலிப்புக் கோப்புகள் திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களுக்கு ஒலிப்புதவிக் கோப்புகளைச் சேர்க்கும் திட்டம்.

எதிர்பார்ப்புகள்

[தொகு]

ஒலிப்பு கோப்புகள் .ogg (ogg vorbis) கோப்புகளாக விக்கிமீடியா பொதுவகத்தில் ஏற்றப்பட்டு இங்கு சொற்களில் சேர்க்கப்படுகின்றன.

  • இத்திட்டத்திற்காகப் பதிவேற்றப்படும் கோப்புகள் ta-சொல்லின்பெயர்.ogg என்ற பெயரிடல் மரபைப் பின்பற்றவேண்டும்.
  • தமிழ் உச்சரிப்பு பிசகாமல் இருக்க வேண்டும் (குறிப்பாக ர/ற, ல/ள/ழ, ந/ன/ண)
  • நிதானமாக உச்சரித்து பதியப்பட்டிருக்க வேண்டும்.
  • இவை ஒலிப்புதவிக்கான கோப்புகள் மட்டுமே. தொழில்முறை ஒலிப்பதிவு தரத்தில் 100 சதம் இரைச்சலின்றி அமைய வேண்டுமென்ற தேவையில்லை. சொல்லின் உச்சரிப்பு தெளிவாக இருந்தால் போதுமானது.

கோப்புகள்

[தொகு]

இத்திட்டத்தின் மூலம் பதிவேற்றப்பட்ட ஒலிப்புக் கோப்புகளில் குறை இருப்பின் திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

ஒலிப்புக் கோப்புகள் காமன்சில் இப்பகுப்பினில் உள்ளன. பின்வரும் பக்கங்களில் உள்ள சொற்களுக்கு ஒலிப்புக் கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவை சொற்களில் சேர்க்கப்பட வேண்டும்.