விக்சனரி:தமிழ் தட்டச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்சனரி, ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

  • எ-கலப்பை என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
  • முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்சனரியின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • கண்டுபிடி தமிழ் தட்டச்சுப் பலகை மிக எளிய முறையில் இணையத்தில் தட்டச்சு செய்ய இத்தளம் உதவிசெய்யும். எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் பதிவுசெய்யத் தேவையில்லை. பல வகையான முறைகளில் நீங்கள் உள்ளீடு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம். அங்கு தட்ட்ச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம்.
  • தமிழ் பயர் பாக்ஸ் உலாவியப் பயன்படுத்தி ஒருங்குறியில் தமிழை நேடியாகத் தட்டச்சுச் செய்யாலாம். தமிழ் பயர்பாக்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இது ஆங்கில ஒலியியல் மற்றும் தமிழ் நெட் 99 விசைப்பலகைகளை ஆதரிக்கின்றது.
  • உமரின் AWC Phonetic Unicode writer ஐ கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.