விக்சனரி:FAQ
Appearance
1. எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?
- NHM எழுதி (NHM Writer) என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, எந்தவொரு கணினி பிரயோகத்திலும் தமிழில் எழுதமுடியும். இது பல விசைப்பலகை அமைப்புக்களையும் உள்ளடக்கியது (தமிழ்99, அஞ்சல், பாமினி, ஆங்கில உச்சரிப்பு முறை...). இதை நிறுவினால் மட்டும் போதுமானது, விண்டோஸ் இயங்குதளத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்யத்தேவையில்லை. இம்மென்பொருளே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். கீழேயுள்ள இகலப்பை, முரசு அஞ்சல் போன்றவற்றை நிறுவுவதுடன், வின்டோஸ் இயங்குதளத்திலும் மொழி சம்பந்தமான மாற்றங்களை நீங்களே செய்யவேண்டியிருக்கும்.
- இகலப்பை என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
- முரசு அஞ்சல்போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.
- இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html .
- இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
2. எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது ?
பார்க்க: விக்சனரி:புதுப் பயனர் பக்கம்.
3. இணையத்தில் உள்ள வேறு தமிழ் அகராதிகள் என்னென்ன?