விக்ரகம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
விக்ரகம், .
பொருள்
[தொகு]- பலவித மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட கடவுளரின் திருவுருவச் சிலைகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- idols of hindu gods made of metals/stones etc.,
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்--வடமொழி--தட்பவம்... கடவுளரின் திருவுருவச் சிலைகளுக்கு விக்ரகம் என்பது பெயர்...இவை பஞ்சலோகம்,கருங்கல் அல்லது மற்ற உலோகங்கள்,மரம்,மண், சுதை போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும்...திருக்கோவில்களில் கருவறையில் நிலையாக இருக்கும் கடவுளின் திருவுருவம் கருங்கல்லாலும் (மூலவர் எனப்படுவார்), உற்சவக்காலங்களில் கோவிலுக்கு வெளியே ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடியத் திருவுருவம், பஞ்சலோகம் எனப்படும் வெள்ளி,தங்கம், துத்தநாகம்,செம்பு,ஈயம் ஆகியவற்றின் கலப்பு உலோகத்தாலும்(உற்சவர் எனப்படுவார்) ஆனவை...மற்றபடி இடம்,வசதிக்குத் தக்கவாறு பல்வேறு பொருட்களால் விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன... பூசை செய்யப்படும் திருவுருவங்கள், முக்கியமாகக் கோயில் திருவுருவங்கள், கண்டிப்பாக விக்ரகம் என்றே குறிப்பிடப்பட வேண்டும்...
-
பலவித மூலப்பொருட்களால் ஆன விநாயகர் விக்கிரகங்கள்
-
அநுமார் விக்ரகம்
-
அநுமார் விக்ரகம்