ஸ்கந்தமாதா
Appearance
தமிழ்
[தொகு]ஸ்கந்தமாதா, .
பொருள்
[தொகு]- இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- one of nine features of goddess durga--skandamata
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்....வடமொழி... स्कन्दमाता....ஸ்க1-ந்த3-மாதா1-...ஸ்கந்தமாதா...இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் ஸ்கந்தமாதா என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் ஐந்தாம் நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்..
- ஸ்கந்தமாதா என்றால் தமிழக தெய்வமான கந்தனின் (முருகனின்) தாய் என்று பொருள்...மலைமகள் பார்வதி பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்று ஸ்கந்தமாதா என்னும் பெயருடையவளானாள்... மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள்... மேலிரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தியிருப்பள்... கீழ் வலது கரத்தால் ஆறுதலைகளுடைய முருகப்பெருமானை மடிமேல் இருத்தி அரவணைத்துக்கொண்டும், கீழ் இடது கரத்தில் அபய முத்திரையுடனும் சிங்கத்தின்மீது அமர்ந்துக் காட்சித் தருகிறாள்...
- மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா , மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி ஆகியவைகளாகும்.