BBS

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

BBS'

பொருள்[தொகு]

  1. செய்திப் பலகை அமைப்பு தகவல் பலகை முறைமை

விளக்கம்[தொகு]

  1. Bulletin Board System என்ற தொடரின் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட இணக்கிகள் அல்லது வேறெந்த பிணைய அணுகுமுறைச் சாதனங்கள் இணைக்கப்பட்ட கணினி அமைப்பு. தொலை துரங்களிலிருந்து தொடர்பு கொள்ளும் பயனாளர்கள் தகவல் மற்றும் செய்திகளைப் பெறுவதற்கு இக்கணினி அமைப்பு உதவுகிறது. இதில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பயன்பாட்டு மென் பொருள்கள் பயனாளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பயனாளர்கள் தகவல்களைப் படிக்கலாம். தாம் விரும்பும் தகவல்களை பிறரின் பார்வைக்கு வைக்கலாம். பிபிஎஸ் பயனாளர்கள் தமக்குள் மின்னஞ்சல் பரிமாறிக் கொள்ளலாம். அரட்டை (Chat) அடிக்கலாம். கோப்புகளை பதிவேற்றம்/பதி விறக்கம் செய்யலாம். பிபிஎஸ் சேவைகள் கட்டண அடிப்படையிலும் இலவசமாகவும் அமைகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=BBS&oldid=1909225" இலிருந்து மீள்விக்கப்பட்டது