Javelin Throw

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Javelin Throw, பெயர்ச்சொல்.
  1. வேலெறிதல்
  2. ஈட்டி எறிதல்

விளக்கம்[தொகு]

  1. தூரமாக எறியும் திறனுக்காக அமைக்கப்பட்ட போட்டி நிகழ்ச்சியாகும் இது. வேல் எறிவதற்காக. வேகமாக ஓடி வருகிற ஒடு பாதையின் நீளம் குறைந்தது 30 மீட்டரிலிருந்து அதிகமாக 36.5 மீட்டர் வரையாவது இருக்க வேண்டும். அங்கே குறிக்கப்பட்டுள்ள 4 மீட்டர் தூரத்திற்கும் 1.50 மீ. அகலத்திற்கும் அமைக்கப்பட்ட கோட்டின் பின்புறமிருந்து தான் எறியவேண்டும். வேலெறிபவர், வேலில் உள்ள நூல் சுற்றுப் பிடிப்பினைப் பிடித்துக் கொண்டு தான் வேலெறிய வேண்டும், எறியப் பெற்ற வேலானது, தரையில் தனது தலைப்பாகமான இரும்புக் கூர்முனையில் குத்திக்கொண்டு விழுந்தால் தான், அது சரியான எறியாகும். எறியப்பட்ட வேலானது அந்தரத்தில் முறிந்து போனால், எறிந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டு ஒருபோட்டியில் ஒருவருக்கு 6 எறி வாய்ப்புகள் உண்டு.


( மொழிகள் )

சான்றுகோள் ---Javelin Throw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Javelin_Throw&oldid=1911365" இலிருந்து மீள்விக்கப்பட்டது