Nachchiyatheevu Farveen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாச்சியாதீவு பர்வீன் என்பவரின் இயற்பெயர் அப்துல் ரஹீம் முஹம்மது பர்வீன் என்பதாகும். இவர் ஆக்க இலக்கியத்தின்பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தனது பெயரை ஊரின் பெயரோடு இணைத்து நாச்சியாதீவு பர்வீன் என்று ஆக்கிக்கொண்டார். இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான நாச்சியாதீவு பர்வீன் அனுராதபுர மாவட்டத்தின் மிகிந்தலை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள நாச்சியாதீவு எனும் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். ஆரம்பக்கல்வியை நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை குருநாகல் சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா தேசிய பாடசாலையிலும் கற்றவர். வணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ள நாச்சியாதீவு பர்வீன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பியகம காரியாலயத்தில் வாடிக்கையாளர் நலனோம்பும் பிரிவில் வேலை செய்கிறார்.

கம்பஹா மாவட்டத்தின் மல்வானை நகரில் வசித்து வரும் இவருக்கு இரண்டு பெண் குழைந்தைகள் உள்ளன . இவரது மனைவி நஸ்மியா மள்வானையை சேர்ந்தவர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்தின் மீதான அளவற்ற காதலால் கவிதை,கட்டுரை, சிறுவர் இலக்கியம், கட்டுரை என்று தமிழ் இலக்கியத்தின் வெவ்வேறு தலங்களில் இயங்கிவரும் இவர் மூன்று கவிதைத்தொகுதிகளையும், ஒரு பத்தி எழுத்து தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதை நூல்கள்

1 சிரட்டையும் மண்ணும் 2 மனவெளியின் பிரதி 3 மூன்றாவது இதயம்

பத்தியெழுத்து

பேனாவால் பேசுகிறேன்

வானொலி,தொலைக்காட்சி கவியரங்கம் பலவற்றில் கலந்து கொண்ட பிரபல்யமிக்க கவிஞரான இவர் பல கவியரங்களுக்கு தலைமையேற்று நடாத்தியுமுள்ளார். இலங்கையில் வெளி வரும் தேசிய நாளேடுகள் மற்றும் சஞ்சிகைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்தும் காத்திரமாக எழுதிவரும் இவரின் கவிதைகள் வாசகர்க்கினால் பெரிதும் விரும்பப்படும் சொல்லாட்சியை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2011 ஆம் ஆண்டு நடாத்திய உலக இஸ்லாமிய பொன்விழா நிகழ்வில் கவியரங்கில் கவிதை வாசித்து அனைவராலும் பாராட்டப்பட்டார். இவரது கவியாற்றலை கௌரவித்து இலங்கை சிங்கள கவிஞர் சங்கம் காவிய அபிமானி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. அனுராதபுர தமிழ் இலக்கிய பரப்பின் முக்கிய பங்காளியாக விளங்கும் நாச்சியாதீவு பர்வீன் பழகுவதற்கு இனியவர். ஊடகத்துறையிலும் இவரது பங்களிப்பு அளப்பெரியது. பல்வேறு சமூகம் சார்பான கட்டுரைகளை எழுதி பாராட்டைப்பெற்றவர். நாச்சியாதீவு என்ற கிராமத்தை உலக அரங்கிற்கு அறியச் செய்த பெருமைக்குரிய சிறந்த எழுத்தாளராக இவரை மூத்த எழுத்தார்களான தெணியான், காப்பியக்கோ ஜின்னா சரிபுதீன், டொமினிக் ஜீவா, மேமன் கவி உட்பட பலர் சொல்லியுள்ளனர்.

நாச்சியாதீவு பர்வீனின் எழுத்தில் இழையோடும் சமூக நீதிக்கான குரல் மீக்காத்திரமானவை, சமரசத்திற்கப்பாற்பட்டவை. வித்துவச்செருக்கற்ற எளிமையான இவரது மொழிநடை வாசகரை இலகுவில் கவர்ந்திழுக்க வல்லவை எனலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Nachchiyatheevu_Farveen&oldid=1913279" இலிருந்து மீள்விக்கப்பட்டது