RAM compression
Appearance
RAM compression
பொருள்
[தொகு]- ரேம் இறுக்கம்
விளக்கம்
[தொகு]- விண்டோஸ் 3. x இயக்கமுறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம். ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறுக்கிச் சுருக்குவதன் மூலம், மெய்நிகர் நினைவகத்தில் (Virtual Memory-பெரும்பாலும் நிலைவட்டு) எழுதுதல்/படித்தல் தேவை குறைகிறது. எனவே கணினியின் வேகம் அதிகரிக்கும். (ஏனெனில், ரேம் நினைவகத்தைவிட வட்டில் உள்ள மெய்நிகர் நினைவகத்தைக் கையாள்வது மெதுவாக நடைபெறும் செயலாகும்). ரேம் சிப்புகளின் விலை குறைந்ததாலும், நினைவகத்தை மிகவும் திறமையாகக் கையாளும் விண்டோஸ் 95/என்டி வருகையாலும் ரேம் இறுக்கம் என்னும் நுட்பத்திற்குத் தேவையில்லாமல் போய்விட்டது. ஒருசில பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.