Travelling salesman problem
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Travelling salesman problem, பெயர்ச்சொல்.
- விற்பனையாள் செல்கைச் சிக்கல்
விளக்கம்
[தொகு]- பொருள் விற்கும் ஆள் ஒருவர், தம் ஊரில் இருந்து கிளம்பி, ஒவ்வொரு ஊராகச் சென்று தம் பொருளை விற்றுவிட்டு, பின் தம் ஊருக்கே திரும்பி வந்துவிட வேண்டும். அவருக்குள்ள சிக்கல் என்னவென்றால், அவர் செல்லும் வழி மிகச் சுருக்கமாக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, S = {மூதூர், அரியூர், முல்லையூர், தாழையூர், வள்ளியூர், அல்லியூர், வானூர் } என்பது அவர் செல்லவேண்டிய ஊர்கள் எனக் கொண்டால், இந்த ஊர்களை எந்த வரிசையில் சென்றால், செல்லுகின்ற தூரம் மிகச்சிறு தொலைவாக (shortest distance) இருக்கும் எனக் கண்டறிய வேண்டும். இந்தச் சிக்கல் விற்பனையாள் செல்கைச் சிக்கல் என அழைக்கப் படுகின்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Travelling salesman problem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்