X. 25

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

X. 25

பொருள்[தொகு]

  1. எக்ஸ்-25

விளக்கம்[தொகு]

  1. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு தர வரை யறை அமைப்பான ஐடியு-டீ (முன்னாள் சிசிஐடீடீ) வெளியிட்டுள்ள பரிந்துரை. பொதி இணைப்புறு பிணையத்துக்கும், ஒரு முனையத்துக்கும் இடையேயான இணைப்பை வரையறுக்கிறது. எக்ஸ். 25 மூன்று வரையறைகளைக் கொண்டது. 1. பிணையத்துக்கும் முனையத் துக்குமிடையே மின்சார இணைப்பு. 2. தரவு பரப்புகை அல்லது தொடுப்பு-அணுகு நெறிமுறை. 3. பிணையப் பயனாளர்களிடையே மெய்நிகர் இணைப்புத் தடங்களை செயலாக்குதல். மூன்று வரையறைகளும் இணைந்து ஓர் ஒத்திசைவான, முழு இருதிசை, முனைபிணைய இணைப்பை வரையறுக்கின்றன. பொதி வடிவம், பிழைக் கட்டுப்பாடு மற்றும் பிற பண்புக்கூறுகள், ஐஎஸ்ஓ வரையறுத்த ஹெச்டிஎல்சி (High Level Data Link Control) நெறி முறையை ஒத்ததாகும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=X._25&oldid=1909437" இலிருந்து மீள்விக்கப்பட்டது