apartment
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
apartment
- பன்மாடி குடியிருப்பு
- அடுக்ககம்
- பல்லடுக்கு குடியிருப்பு
- அடுக்குமாடி வீடுகள்
- பன்மாடி இல்லங்கள்
- தொடர்மாடி மனைகள்
- அடுக்குமாடி
- பன்மாடி
- பன்மாடிக்குடில்
விளக்கம்
[தொகு]தற்கால கட்டட வடிவமைப்புகளின்படி, நிலமட்ட வீடுகள் போன்றல்லாமல், அநேகமாக நகர் பகுதிகளில், குடியிருப்புக்காகக் கட்டப்படும் "பல மாடி" அல்லது "பல்லடுக்கு" கட்டடங்கள் "பன்மாடி குடியிருப்பு" அல்லது "பல்லடுக்கு குடியிருப்பு" என்றழைக்கப்படுகின்றன.
இருப்பினும், "apartment" எனும் ஆங்கிலச் சொல்லின் மூலம், பிரெஞ்சு சொல்லான "appartement" அல்லது "appartimento" எனும் இத்தாலிய மொழியில் இருந்து வந்தாகும். அதன் பொருள் இருமொழியிலும் "ஒரு தனிப்பட்ட இடம்" அல்லது "ஒரு தனிப்பட்ட பகுதி" என்பதாகும். [The word “apartment" comes from the French word appartement and the Italian word appartimento, both of which mean “a separated place."] அதாவது ஒரு பல்லடுக்கு கட்டடத்தில், ஒரு மாடியில், ஒரு குடியிருப்பாளருக்கான ஒரு தனிப்பட்ட பகுதி என்பதாகும்.
தற்கால கட்டடக்கலை வடிவமைப்பில், குடியிருப்புக்கு என்றே கட்டப்படும் பல்லடுக்கு கட்டடங்களில், மண்டபம் படுக்கை அறைகள், சமையலறை, உணவுண் அறை போன்ற பல்வேறு வசதிகள் கொண்டவைகளாக "மாடிமனை குடியிருப்புகள்" உள்ளன.
ஒரு பன்மாடி குடியிருப்பு ஒரு தனியாரினதோ அல்லது அரசினதாகவோ இருக்கலாம். அதன் குடியிருப்பாளர்கள் அதில் ஒரு வீட்டை சொந்தமாக அல்லது வாடகைக்கு பெற்று வசிப்பவர்களாக இருப்பர்.
- அடுக்ககம்; அடுக்கில்லம்; தனி இருப்பிடம்; தனி அறை; தனியறை
- குடியிருப்பு; வீடு
- வீட்டின்பகுதி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் apartment