benefit of the doubt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:=தமிழ்= {{}}

பொருள்
  1. ஐய நன்மை
  2. ... 'ஐய நன்மை ' என்னும் மொழிநடையானது பெரும்பாலும் வழக்குகளின் தீர்ப்புகளில் பங்களிக்கக்கூடிய ஒரு முக்கியமான விடயம்.ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ஒருவர் மீது அக்குற்றத்தை நிரூபிக்க சட்டரீதியிலான தெளிவான ஆதாரங்கள் இல்லாத பொழுது அந்த சந்தேகத்தின் பலனாக வழக்கின் தீர்ப்பானது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வழங்கப்படும்.இதை ஐயத்தின் அடிப்படையிலான நன்மை என்று குறிப்பிடலாம்.
விளக்கம்
  1. ... 'ஐயத்தின் அடிப்படையிலான நன்மை' எனும் இம்மொழிநடையானது வழக்கத்தில் இரண்டு இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 1.நீதித்துறையில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ஒருவர் மீது அக்குற்றத்தினை நிரூபிக்க சட்டரீதியாக போதுமான ஆதாரங்கள் இல்லாத பொழுது அக்குற்றச்சாட்டு குறித்த ஐயம் எழுவதை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக்கி தீர்ப்பானது வழங்கப்படும்.    2.மட்டைப் பந்து (கிரிக்கெட்) விளையாட்டில் பின்பற்றப்படும் விதிகளில் ஒன்று.பந்தினை தடுத்து ஆடுபவர் ஆட்டமிழந்ததில் நிச்சயமற்ற தன்மை நிலவினால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக நடுவர்கள் முடிவெடுப்பது. 3.The Urban dictionary இம்மொழிநடை குறித்து பின்வருமாறு வரையறுக்கிறது."ஐயத்தின் அடிப்படையிலான நன்மையானது, நடந்த நிகழ்ச்சி குறித்து உங்களுக்கே சந்தேகம் இருக்கும்பொழுது குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் விளக்கத்தை நம்பி,அவர் கூறும் செய்திகளை ஏற்று அவரின் பக்கமாக முடிவெடுப்பது என்பதாகும்".    4.The Free dictionary, ஐய நன்மையானது "இரண்டையும் செய்வதற்கான சாத்தியக்கூறு இருக்கும்பொழுது ஒருவர் குறித்த தீமையை நம்பாமல் விடுத்து நன்மையை நம்புவது" என விளக்கம் கொடுக்கிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=benefit_of_the_doubt&oldid=1836997" இலிருந்து மீள்விக்கப்பட்டது