உள்ளடக்கத்துக்குச் செல்

conversion therapy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]

conversion therapy

  • மாற்றுதல் என்ற பெயரிலான போலி மருத்துவம்.
விளக்கம்

LGBTIQA+ நபர்களின் அடையாளங்களை நிராகரித்து சமுதாய வழமைக்குட்பட்ட பாலினம் மற்றும் அல்லது பாலீர்ப்பு கொண்டவர்களாக “மாற்றும்” மருத்துவச் செயல்முறைகள். இவை அறத்துக்கு எதிரானவை. சட்டத்துக்குப் புறம்பானவை, அறிவியல் ரீதியாக தவறானவை . இவை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலும் ஒருவரது பாலினம் மற்றும் அல்லது பாலீர்ப்பை மாற்றும் நடைமுறைகள் கையாளப்படுகின்றன. இவை இரண்டுமே ஆங்கிலத்தில் “கன்வெர்ஷன் தெரப்பி” என்று அழைக்கப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நபர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படக்கூடும். சமயங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=conversion_therapy&oldid=1972653" இலிருந்து மீள்விக்கப்பட்டது