event-driven processing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

event-driven processing

பொருள்[தொகு]

  1. நிகழ்வுத் தூண்டல் செயலாக்கம்

விளக்கம்[தொகு]

  1. ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் ஒரு பொத்தானை சொடுக்குவது, விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்து வது, வட்டினைச் செருகுவது, ஒரு சாளரத்தின் மீது சொடுக்குவது இவை யெல்லாம் நிகழ்வுகளே. தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் வரிசையாக அமைகின்றன. நிரலானது ஒவ்வொரு நிகழ்வாக ஏற்று, அதற்கேற்ப செயல்படும். சில வேளைகளில் சில நிகழ்வுகள் முன்னுரிமையுள்ள இன் னொரு நிகழ்வைத் தூண்டலாம். event-driven programming : நிகழ்வுத் தூண்டல் நிரலாக்கம்;நிகழ்வு முடுக்க நிரலாக்கம் : விசையை அழுத்துதல், சுட்டியைச் சொடுக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிரலாக்கம் செய்யும் முறை. முதன்முதலாக ஆப்பிள் மெக்கின்டோஷில் நிகழ்வு முடுக்க நிரல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால் இப்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸில் எக்ஸ்விண்டோஸ் போன்ற அனைத்து வரைகலைப் பணித்தளங்களிலும் நிகழ்வு முடுக்க நிரலாக்கமே பின்பற்றப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=event-driven_processing&oldid=1909257" இலிருந்து மீள்விக்கப்பட்டது