flowerpot
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- flower + pot
பொருள்[தொகு]
- flowerpot, பெயர்ச்சொல்.
- பூந்தொட்டி
விளக்கம்[தொகு]
- வீட்டிற்குள்ளும், தோட்டத்திலும் மற்றும் பொதுவிடங்களிலும் அழகுக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூந்தொட்டிகளை வைத்திருப்பர்..இவைகளின் வகைவகையான, பலவண்ணங்களில் மலர்களைத் தரும் செடிகளை வளர்த்திருப்பார்கள்...மூலிகைச்செடிகளையும், குறுமரங்களையும்கூட தேவைக்கேற்ப வளர்ப்பர்...இந்தத் தொட்டிகள் களிமண், பீங்கான் நெகிழி, சீமைக்காரை, கற்காரை போன்றப் பொருட்களால் பலவிதமான வடிவமைப்புகளில், கலைநயத்தோடும், பல நிறங்களில், பலவித கொள்ளளவுகளில் தயாரிக்கப்படுகின்றன...இவற்றில் ஊற்றும் தண்ணீர் அதிகமானால் வடிந்துவிடச் சிறுத் துளைகள் இவற்றினடியில் உண்டாக்கப்பட்டிருக்கும்...தேவையானபோது விரும்பிய இடத்திற்கு எடுத்துச்சென்று, விருப்பப்பட்ட வகையில்/வரிசையில் காட்சியளிக்குமாறு ஏற்பாடு செய்துக்கொள்ளக் கூடியவை...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flowerpot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்