go to statement
Appearance
go to statement
பொருள்
[தொகு]- கோ டூ கூற்று'
விளக்கம்
[தொகு]- 'அங்கு செல்' ஆணை : ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறை வேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின்போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். நுண்செயலி மொழியில் கிளைபிரி (Branch), தாவல் (Jump) ஆணையாக இருந்தது. உயர்நிலை கணினி மொழிகளில் அங்கு செல் (GoTo) என்று மாறியது. பேசிக், பாஸ்கல், சி, சி++ போன்ற பல்வேறு மொழிகளில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, இக் கட்டளையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நிரலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். காரணம், நிரலின் தருக்கமுறை ஓட்டத்தைப் புரிந்துகொள்ள நிரலருக்கும் கடினம்;மொழிமாற்றி (Compiler) யும் சிக்கலான வேலையைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.