gotu-kola
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]பொருள்
[தொகு]- gotu-kola, பெயர்ச்சொல்.
(Hydrocotyle Asiatica...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
[தொகு]- சித்த, ஆயுர்வேத மருத்துவங்களிலும், ஆப்பிரிக்க, சீன மருத்துவத்திலும் பெரிதும் பயன்படும் மூலிகை, வல்லாரை எனப்படும் gotu-kola... இந்த மூலிகை முக்கியமாக பித்த ஜிக்வாகண்டகரோகம், மலக்கழிச்சல், இரத்த கிரகணியால் உண்டாகும் கடுப்பு ஆகியப் பிணிகளைப் போக்கும்...மேலும் இதை முறைப்படிப் பயன்படுத்த குட்டம், கண்டமாலை, மேகரணம், கட்டி, பல்லீறுகளின் இரணம், சூதகவாயு, சூதக சந்நி, மூர்ச்சாரோகம், மேகவாயுப் பிடிப்பு, கணுச்சூலை, வீக்கம், பயித்தியம், நினைவுச் சக்திக் குறைவு, வெள்ளை ஆகியப், பிணிகள் குணமாகும்...
- இலங்கையிலும் மற்றும் வியத்னாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேயா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் உணவுப்பொருளாகவும், பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது... மற்ற தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளிலும் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது...கற்றக் கல்வி மறக்காமல் நன்றாக ஞாபகத்தில் இருக்கச்செய்வதால் ஆந்திரர்கள் இந்த மூலிகையை கலைவாணியின் பெயரில் ஸரஸ்வதி ஆகு என்றே அழைப்பர்...
- gotu-kola (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---gotu-kola--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு