meme
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]meme
விளக்கம்
- மீம் எனும் ஆங்கிலச்சொல், ஒரே பண்பாட்டில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் சிந்தனை அல்லது கருத்துப்பரிமாற்றம் எனப் பொருளுறுமாறு 1976இல் உருவாக்கப்பட்டது.[1] தமிழில் "மீ" என்பது உயர்ந்தது, எஞ்சியிருப்பது, புகழ் என்பவற்றுக்கான வேர்ச்சொல்லாகும்.[2] "ஒருவரினின்று இன்னொருவருக்குப் பரவுவது" எனும் ஆங்கிலப் பதத்தின் பொருளை இவை ஒத்துச் செல்வதன் காரணமாக, ஒலிப்பு ஒத்துப்போகுமாறு, "மீமி" என்ற சொல்லாக, "மீம்" மொழியாக்கப்பட்டிருக்கின்றது.
- மீம் எனும் ஆங்கிலச்சொலோடு ஒலியொப்புமை கருதிக் கலைச்சொற்களை உருவாக்குவதைக் கூடுமானவரைக்கும் தவிர்க்க வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்புகள் ஒரு கலப்பு மொழியை, ஆங்கிலத்தையே தமிழ்போல் உச்சரிக்கும் தன்மையை வளர்த்து விடுகின்றன. இதன் மூலம் from Greek mimēma ‘that which is imitated,’ on the pattern of gene என்பதால் “போன்மி” என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறேன்.
- ↑ Merriam Webster Dictionary http://www.merriam-webster.com/dictionary/meme
- ↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி http://www.tamilvu.org/library/ldpam/ldpam07/ldpam072/html/ldpam072ind.htm