occupancy certificate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

occupancy certificate,பெயர்ச்சொல்

  1. குடியிருப்புச் சான்றிதழ்
  2. குடிபுகு சான்றிதழ்
  3. குடிபுகு சான்று
பயன்பாடு
  1. குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்திலும்கூட, அதில் குடியேறியிருந்த பலரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். இந்தக் கட்டடத்துக்கு குடிபுகு சான்றிதழ் (ஆக்குபென்சி சர்டிபிகேட்) பெற்றிருக்கவில்லை என்பதால் இத்தனை பேர் உயிரிழக்க நேரிட்டது
  2. தமிழ்நாட்டில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு குடிபுகு சான்று பெறப்படுகிறதா என்றால் சந்தேகமே. அடுக்குமாடிக் குடியிருப்புக்காக உள்ளாட்சியில் வரிசெலுத்திய சான்றுகளை கான்டிராக்டர்கள் காட்டுகிறார்களே தவிர, குடிபுகு சான்று (ஆக்குபென்சி சர்டிபிகேட்) பெற்றிருப்பதாக காட்டுகிறார்களா?
  3. புதிதாக ஒரு கட்டடம் கட்டிய பிறகு, அது குடியிருப்பு அல்லது வணிக வளாகம் என எதுவாக இருந்தாலும், அதன் உறுதித் தன்மையை உள்ளாட்சியில் அதற்கான உரிய அதிகாரிகளைக் கொண்டு சோதித்துப் பார்த்து அளிக்கப்படுவதுதான் குடிபுகு சான்று. வணிகத்துக்காக கட்டிய கட்டடத்தை இடித்துக் குடியிருப்பாக மாற்றும்போதும், குடியிருப்பாக உள்ள கட்டடத்தை சிறுமாறுதல்கள் செய்து வணிகக்கடைகளாக மாற்றும்போதும்கூட இந்த குடிபுகு சான்று அவசியம் (தினமணி தலையங்கம், 10 April 2013)
"https://ta.wiktionary.org/w/index.php?title=occupancy_certificate&oldid=1831152" இலிருந்து மீள்விக்கப்பட்டது