operator overloading
Appearance
==
==
பொருள்
[தொகு]- செயற்குறிப் பணி மிகுப்பு
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட செயற்குறி, ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் செயல்படும் எனில் அதனைப் பணி மிகுப்பு என்கிறோம்.எடுத்துக்காட்டாக, என்னும் கணக்கீட்டுச் செயற்குறி இரண்டு எண்களைக் கூட்டப் பயன்படும்.அதனையே இரண்டு சரங்களை (strings) இணைக்கப் பயன்படுத்துவோம் ("Good" + "Morning.") எனில், இதனைச் செயற்குறி பணி மிகுப்பு என்கிறோம். இங்கே என்னும் அடையாளம் இருபுறமும் கொடுக்கப்பட்ட மதிப்புகளின் தரவு இன (Data Type) அடிப்படையில் செயல்படும்.அடா, சி++, சி# மொழிகள் செயற்குறிப் பணிமிகுப்பை அனுமதிக் கின்றன.சி, ஜாவா போன்ற மொழிகள் இக் கருத்துருவை (concept) அனுமதிக்கவில்லை.