உள்ளடக்கத்துக்குச் செல்

referee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

referee

  1. நடுவர்
  2. நற்சான்றளிப்பவர்

விளக்கம்

[தொகு]

கூடைப் பந்தாட்டத்திற்கு இரண்டு நடுவர்கள் உண்டு. விதிகளுக்குட்பட்டு, அவர்கள் ஆட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தி நடத்தி முடிப்பார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, எந்த ஆடுகளப் பகுதியில் தாங்கள் இருந்து செயல்பட வேண்டும் என்று பகுத்துக் கொண்டு கண்காணிப்பார்கள்.

எந்த நடுவரும் அவரவருக்கான பகுதியில் தான் கண்காணிக்க வேண்டும். மற்றவர் பகுதியில் எடுக்கின்ற முடிவு பற்றி கேள்விகள் எழுப்பவோ, அல்லது அதனை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரமில்லை.

இரண்டு நடுவர்களும் ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் ஒரு விதிமீறலைப் பற்றி முடிவெடுக்கும் பொழுது, அந்த முடிவு பல வகையானத் தண்டனைகளைத் தருமானால், அவற்றில் கடுமையான தண்டனை எதுவோ, அதையே செயல்படுத்த வேண்டும்.

குறிப்பிட்டப் போட்டிக்கு முக்கிய பொறுப்பேற்று நடத்தும் பெரும் பொறுப்பினை வகிப்பவர் நடுவர் என்று அழைக்கப்படுகின்றார். அது ஓட்டப்பந்தயங்கள் அல்லது எறியும் நிகழ்ச்சிகள் அல்லது தாண்டும் நிகழ்ச்சிகள் என்பதில் ஒன்றாக அமையும்.

நிகழ்ச்சிநிரல்படியே சரியாக நிகழ்ச்சிகளை நடத்தவும் துணை நடுவர்கள் இடையில் கருத்து வேற்றுமை ஏற்படும் பொழுது சுமுகமாகத் தீர்த்து வைத்துத் தொடரவும், மைதானம் சரியில்லாத பொழுது அதற்கான முடிவு எடுக்கவும் போன்ற அதிகாரங்களைப் படைத்தவராக நடுவர் விளங்குகின்றார். இவரது கண்காணிப்பில், இவருக்குக் கீழ் உள்ள நிகழ்ச்சிகளுக்குரிய விதி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதிகாரிகள் வழி நடத்தப்படுகின்றனர். நிகழ்ச்சிகள் தெளிவாக நடத்தப்படுகின்றன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=referee&oldid=1911388" இலிருந்து மீள்விக்கப்பட்டது