scalar data type
Appearance
scalar data type
பொருள்
[தொகு]- ஒற்றைமதிப்பு தரவு இனம்
விளக்கம்
[தொகு]- இதைவிடப் பெரியது, அதைவிடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர் மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம்.
எடுத்துக்காட்டு
[தொகு]- முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும் எண்ணல் வகை (user defined enumerated type), பூலியன் ஆகிய தரவு இனங்களையும் இந்த வகையில் அடக்கலாம். மிதவைப்புள்ளி எண்களை இந்த வகையில் சேர்ப்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவற்றையும் வரிசைப்படுத்தமுடியும், ஒப்பிட முடியும் என்றபோதிலும் தோராயமாக்கல், இனமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கருத்தில் கொண்டு புறக்கணிப்பாரும் உளர்.