sitting block

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sitting block, பெயர்ச்சொல்.
  • (கபடி) உட்காரும் கட்டம்.[1]

விளக்கம்[தொகு]

  1. கபடி ஆட்டத்தின்போது தொடப்பட்டு, பிடிபட்டு வெளியேற்றப்பட்ட ஆட்டக் காரர் ஒருவர், தான் விரும்பிய இடத்தில் நின்று கொண்டு, வாய்ப்பு ஏற்படும் பொழுது உள்ளே வந்து ஆடக் கூடாது. வரம்புக்கு உட்பட்ட விளையாட்டு முறை வேண்டும் என்பவற்காக, வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்கள், வரிசை முறையாக அமர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக, ஆடுகளப் பகுதிகளின் கடைக் கோட்டின் பின்புறத்தில் 2 மீட்டர் துரத்தில் உட்காரும் கட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டத்தின் அளவு 8 மீட்டர் நீளம். 2 மீட்டர் அகலமாகும். அவர்களை அமர்த்தி வைத்து, சரியான நேரத்தில், சரியான ஆட்களை ஆட அனுப்பும் பொறுப்பு, கோடு காப்பாளர்களைச் சார்ந்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).
"https://ta.wiktionary.org/w/index.php?title=sitting_block&oldid=1898484" இலிருந்து மீள்விக்கப்பட்டது