உள்ளடக்கத்துக்குச் செல்

unicode

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  1. ஒருங்குறி; யுனிகோடு

விளக்கம்

[தொகு]
  1. 1988-1991 காலகட்டத்தில் யுனிகோடு கூட்டமைப்பு உருவாக்கிய 16 பிட் எழுத்துக் குறியாக்கத் தர வரையறை. ஒர் எழுத்தைக் குறிக்க இரண்டு பைட்டுகள் பயன்படுவதால் மொத்தம் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட (216) எழுத்துகளைப் பெறமுடியும். எனவே யுனிகோடில் உலகத்திலுள்ள வரிவடிவம் கொண்ட அனைத்து மொழி எழுத்துத் தொகுதிகளையும் பெற முடியும். ஆனால் 1-பைட் எழுத்துக் குறி முறையான ஆஸ்க்கியில் 256 எழுத்துகள் மட்டுமே இயலும். ஆஸ்க்கியின் 256 எழுத்துகளும் யுனிக் கோடின் முதல் 256 இடங்களில் இருத்தப்பட்டுள்ளன. 39, 000 இடங்கள் பல்வேறு மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21000 இடங்கள் பண்டைச் சீன வரி வடிவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியிடங்கள் வருங்கால விரிவாக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான இடங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. கணினி களஞ்சியப் பேரகராதி - தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=unicode&oldid=1993794" இலிருந்து மீள்விக்கப்பட்டது