vetiver
Appearance
ஆங்கிலம்
[தொகு]சொற்பிறப்பு:
- (தமிழ்---வெட்டிவேர்---மூலச்சொல்)
(Andropogan Muricatus...(தாவரவியல் பெயர்))
பொருள்
[தொகு]- vetiver, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இது ஒரு மருத்துவ குணமுள்ளத் தாவரவகையாகும்...மிகுந்த நறுமணம் கொண்டது...வாசனைத் திரவியங்களையும் தயாரிக்க உதவுகிறது...பூமாலைகளிலும் இடையிடையே இந்தவேர்த்துண்டுகளை வைத்துக் கட்டுவர்...இந்தத்தாவரத்தின் வேர் வெண்மஞ்சள் நிறமாகவும், கூந்தலைப்போல அடர்த்தியாகவும், நீளமாகவும் பூமியில் இறங்கியிருக்கும்...முறைப்படிப் பயன்படுத்தினால் பித்தத்தால் அகாலகாலத்தில் உண்டாகும் தாகம், சோமரோகம், காமாலை, இரத்தபித்தம், சுரம், பரவுகின்ற குட்டம், தலைநோய், கழுத்து நோய், சுக்கில நட்டம், உன்மத்தம், தீ சுட்டப்புண், முலைச்சிலந்தி, திரிதோஷம், மூர்ச்சை, நேத்திரரோகம், வித்திரிதிக் கட்டி, மேகக் கட்டி,ஆகியப் பிணிகள் போகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---vetiver--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு..[1], [2], [3]