windows 95

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • windows 95, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

விண்டோஸ் 95


விளக்கம்[தொகு]

இன்டெல் 80386,அதற்கும் மேம்பட்ட செயலிகளில் செயல்படக் கூடிய ஓர் இயக்க முறைமை. வரைகலைப் பயனாளர் இடைமுகம் கொண்டது. மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1995இல் வெளியிட்டது. விண்டோஸ் 3.11, பணிக்குழுவுக்கான விண்டோஸ் 3.11,எம்எஸ்டாஸ் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக வெளியிடப்பட்ட ஒரு முழுமையான இயக்க முறைமை.விண்டோஸ் 3.xடாஸ்மீது செயல்படும் ஒரு பணிச்சூழல் (Operating Environment). ஆனால் விண்டோஸ் 95,டாஸின் உதவியின்றிச் செயல்படும் ஒரு தனித்த இயக்க முறைமை. என்றாலும் எம்எஸ்டாஸ் மென்பொருள்களை விண்டோஸ்95இல் இயக்க முடியும். 255 எழுத்துகள் வரை நீண்ட கோப்புப் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். எந்தப் பிணையத்தின் கிளையனாகவும் செயல்படவல்லது. தம்மளவில் விண்டோஸ் 95 கணினிகளை ஒன்றாகப் பிணைத்து, சமனி-சமனி (peer to peer) பிணையம் அமைத்துக் கொள்ள முடியும். இணைத்து-இயக்கு(plug and play)முறையில் எந்தவொரு வன்பொருளையும் அது வாகவே அடையாளம் காணும். பல்லூடகம், இணைய இணைப்புக்கான வசதிகள் அனைத்தும் கொண்டது. 80386 செயலி, 4 எம்பி ரேம் உள்ள கணினிகளில் செயல்படும். என்றாலும் 80486 செயலி 8 எம்பி ரேம் இருப்பது நல்லது.

உசாதுனை[தொகு]

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---windows 95--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=windows_95&oldid=1985992" இலிருந்து மீள்விக்கப்பட்டது