உள்ளடக்கத்துக்குச் செல்

குங்குமப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குங்குமப்பூத் துருவல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • குங்குமப்பூ (பெ)
    குங்குமப்பூ
  1. செம்மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு வகைப் பூ.
  2. மரலுகம்
  • ' தா.இயல்-பெ crocus sativus
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

இதன் மருத்துவ குணங்கள்

  • தாது நட்டம், நாவறட்சி, குடல்வாதம், மேகநீர், கீல்பிடிப்பு, கபாதிக்கம், அதிக சுரம், பயித்தியம், மண்டைவலி, கருவிழியில் படரும் பூ, கண்ணோய், வாந்தி, சலபீநசம், காதுமந்தம், நீரேற்றம், வாயினிப்பு, பிரசவமலினம் ஆகிய நோய்கள் குங்குமப்பூவை அதற்குண்டான முறையில் உபயோகித்தால் நீங்கும்.
  • இந்தப்பூவை கர்பிணிக்களுக்கு வேளைக்கு 1/2-1 குன்றி எடை தாம்பூலத்துடன் கொடுத்துவந்தால் சீதள சம்பந்தமான பிணிகள் அண்டாமல் பிறக்கும் குழந்தை நல்ல தேசசும் திடகாத்திரமும் பெற்று இருக்கும். குங்குமப்பூ மாத்திரையும், குங்குமப்பூ நெய்யும் இந்த பூக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
பயன்பாடு
  • ஜூலை இறுதி வாரத்தில் துவங்கி, ஆகஸ்ட் மாத இறுதி வரை குங்குமப்பூவுக்கான நடவு காஷ்மீரில் நடைபெறும். இந்தியாவில் விவசாயம் மூலமாக உற்பத்தியாகும் பொருட்களிலேயே, மிகவும் விலை உயர்ந்த பொருள் குங்குமப்பூ ஆகும். ஒரு கிலோ குங்குமப்பூ எடுக்க, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பூக்கள் தேவைப்படும். எனவே தான் இந்திய வேளாண்மை அமைச்சகம், குங்குமப்பூ விவசாயத்திற்கான நடவு முறையை, "விலை உயர்ந்த நடவு' என அழைக்கிறது. (விலை உயர்ந்த நடவு, தினமலர், ஜூலை 22,2011)

(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - குங்குமப்பூ )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குங்குமப்பூ&oldid=1634022" இலிருந்து மீள்விக்கப்பட்டது