உள்ளடக்கத்துக்குச் செல்

தபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தபு வினைச்சொல் .

  1. சாவு
  2. கொல், சாகடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (verb)

  1. die
  2. put to death

இந்தி

  1. ...
  2. ...
விளக்கம்
  • தமிழ் மொழியின் பொருள் இலக்கணத்தை விளக்குகின்ற "புறப்பொருள் வெண்பா மாலை" என்னும் நூல், மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழும் நிலையை "தபு-தார நிலை" என்கிறது. "தபு" என்றால் "இறத்தல்" என்றும், "தாரம்" என்றால் "மனைவி" என்றும் பொருள். தபுதாரன் என்பவன் மனைவியை இழந்தவன். சான்றாக,
பைந்தொடி மேல்உலகம் எய்தப் படர்உழந்த
மைந்தன் குரிசில் மழைவள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி
எனும் பாடல் அமைகிறது. இப்பாடல், தன் மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல், அவள் நினைவால் வருந்திப் புலம்பும் நிலை பண்டைக்கால ஆடவரிடம் நிலைபெற்றிருந்ததை எடுத்துரைக்கிறது. பின்னர் நிகழ்ந்த கால மாற்றத்தின் காரணமாக அந்நிலை மாறி, "பெத்த அம்மா செத்தா; பெத்த அப்பன் சித்தப்பன்" என்ற பழமொழிக்கேற்ப ஆடவர்கள், மனைவி இறந்தவுடன் பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல தாரங்களை மணந்து கொண்டதாலும் "தபுதாரன்" என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகையால், கைம்பெண் என்ற சொல்லுக்கு இணையான ஆண்பாற் சொல் "தபுதாரன்" என்பதாகும்.(தபுதாரன், தமிழ்மணி, 20 மே 2012 )
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • தபு என்னும் என்னும் சொல் ஒன்றில் மட்டும் பு எழுத்து முற்றியலுகரமாக ஒலிக்கும். அப்போது அது இருவகைப் பொருளைத் தரும். தபு என்னும் சொல்லை படுத்தல் ஓசை தந்து ஒலிக்கும்போது தான் சாதலாகிய தன்வினைப் பொருளையும், எடுப்போசை தந்து ஒலிக்கும்போது பிறிதின்வினைப் பொருளில் பிறிதொன்றினைச் சாகச்செய் என்னும் பொருளிலும் வரும். (தொல்காப்பியம் மொழிமரபு 47)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---தபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +



( மொழிகள் )

சான்றுகள் ---தபு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தபு&oldid=1986709" இலிருந்து மீள்விக்கப்பட்டது