மானம்
Appearance
மானம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தன் மதிப்பு
- கௌரவம்
- கற்பு
- பெருமை
- புலவி
- வலிமை
- சபதம்
- கணிப்பு
- அளவுகருவி
- மாற்றாணி
- பட்டணம்படியில் அரைப் படி கொண்ட அளவு
- ஒப்புமை
- பிரமாணம்
- அன்பு
- தன்மானம்
- அபிமானம்
- அவமானம்
- இலச்சை
- குற்றம்
- ஆகாய விமானம்
- கோவில் விமானம்
- மண்டபம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- honour, dignity
- chastity
- pride, eminence
- bouderie, sulks
- strength
- vow
- computation
- instrument or means of measurement
- touch-needle
- half a Madras measure
- comparison
- test; means of knowledge
- love, affection
- attachment
- disgrace
- shame
- fault
- aerial chariot
- vaulted roof of the inner shrine of a temple
- pillared hall
விளக்கம்
பயன்பாடு
- அடி பைத்தியமே உனக்கு மானம், ரோஷம் ஒன்றுமில்லையா? வாதாபியிலேயே எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வந்தாயா? (சிவகாமியின் சபதம், கல்கி)
- வயதாயிற்றே தவிர உங்களுக்கு மானம், வெட்கம் ஒன்றும் கிடையாது. இப்படித்தானா பேசுவது? (கணையாழியின் கனவு, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடியார், 294)
- புகழு மானமு மெடுத்து வற் புறுத்தலும் (தொல்காப்பியம். பொ. 41)
- மான மங்கையர் வாட்டமும் (சீவக சிந்தாமணி. 2382)
- அப்படியே செய்வேனென மானஞ்செய்து (இராம நா. அயோத். 7)
- மானமில்லுயர் மணிவண்ணன் (சீவக சிந்தாமணி. 2747)
- பாலு நீரும்போல மானம்வைத் தாண்டீரே ((இராமநா. அயோத். 7)
- மறத்திடை மானமேற் கொண்டு ((பு. வெ. 5, 6)
- மானந்தலைவருவ செய்பவோ (நாலடியார், 198)
- வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும் (கம்பராமாயணம். சடாயுவுயிர்நீ. 145)
- மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல்காப்பியம்.எழுத். 47)
- மானமிசை யூர்ந்து ((கந்தபு. அசுரர்யா. 14)
- பொன்மானந் தனக்கு வடமேற்றிசை ((திருவிளை. கல் லானைக். 3)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- மானம்
- தன்மானம், அபிமானம், அவமானம்
- வருமானம், சேர்மானம், பிடிமானம், சரிமானம், சாய்மானம், தீர்மானம்
- மனம், உயர்வு, மேன்மை, வௌவானத்தி, மண்டபவீடு
ஆதாரங்கள் ---மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +