நைசா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நைசா, (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- பிறர் அறியாமல் செய்யும் செயல்.
- தாழ்மையாக, பணிவாக
- மிக மிருதுவாக
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a secret act without attracting others' notice.
- kindly, politely
- finely
விளக்கம்
[தொகு]- சென்னை வட்டார வழக்கு....பிறர் அறியாவண்ணம், அவர்களின் கவனத்தைக் கவராமல் செய்யும் செயல்..இந்தச் சொல்லின் சில பிரயோகங்கள் ஆங்கிலச் சொல் நைஸ் (nice) என்னும் சொல்லின் சில பொருளோடு ஒத்துப்போவதால் அந்தச் சொல்லிலிருந்தே உண்டாகியிருக்கலாம்...
பயன்பாடு
[தொகு]- அவன் இங்கேதான் எங்களோடு இருந்தான்...எங்கோ நைசா போய்விட்டான்...(நைசா நழுவிவிட்டான், நைசா கழண்டுவிட்டான்)
- இந்தா, இந்த புத்தகத்தைக் கொண்டுபோய் நைசா அவனுடைய பையில் போட்டுவிடு...
- சுந்தரோடு நைசா பேசி காரியத்தை முடித்துவிடு...
- எல்லோரிடமும் நைசா பேசிப் பழகினால்தால் நம் காரியங்கள் நடக்கும்...
- கதவைத் திறந்ததும், நைசா கூட்டத்தோடு கூட்டமாக அரங்கத்திற்குள் நுழைந்துவிடு...
- கோதுமையை நைசா அரைத்துக்கொண்டுவா...அப்போதுதான் சப்பாத்தி நன்றாக, உருசியாக இருக்கும்...