இராசநாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

இராசநாகம்பெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. cobra, king ஆங்கிலம்
விளக்கம்
  1. கருநாகம்அல்லது இராசநாகம் என்னும் பாம்பினம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் காணப்படுகிறது. நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது... சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளர்கிறது.. அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இப்பாம்புகள் பொதுவாக மற்றப் பாம்புகளையே உணவாகக் கொள்கின்றன.இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், பிறகு பலநாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழக்கூடியன.. இதன் நஞ்சு ஒரு கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன... தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன...பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில், நீர் நிலைகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன... விவசாயம், மனிதக் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் இப்பாம்பினம் மெல்ல அழிந்துவருகிறது.

பாம்பு-பழமொழிகள்[தொகு]

  1. பாம்பென்றால் படையும் நடுங்கும்
  2. பாம்பின் கால் பாம்பு அறியும்.
  3. பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
  • பாலை ஊற்றி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்துக் கொல்ல நேருமே..(மந்திரி குமாரி திரைப்படத்தின் ஒரு பாடலிலிருந்து சில வரிகள்)

ஆதாரங்கள் ---இராசநாகம்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசநாகம்&oldid=1201562" இலிருந்து மீள்விக்கப்பட்டது