உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:ஒலிப்பு1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தடித்த கருநிறம் தலைப்புச்சொல்லுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அது பயன்பாடு பகுதிகளில் தலைப்புச்சொல் எளிதாகத் தெரிய வழிவகுக்கும். இப்பொழுது பல சொற்களுக்குக் கருநிறம் பயன்படுத்துவதால்,தலைப்புச்சொல்லைக் கண்டறிவது எளிதாக்க மாற்றப்பட்டது.--த*உழவன் 06:44, 27 அக்டோபர் 2010 (UTC)Reply
பக்க வடிவமைப்பு வண்ணங்கள் பற்றி ஏற்கனவே நிறைய கலந்துரையாடி உள்ளார்கள் என்று நினைக்கிறேன். இது போல் பல பக்கங்களைப் பாதிக்கும் மாற்றங்களைச் செய்யும் முன் தயவு செய்து பேச்சுப் பக்கத்தில் உரையாடி முடிவெடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். தலைப்புச் சொல்லை எடுப்பாகக் காட்டும் நோக்கம் நன்று. ஆனால், தற்போது உள்ள நிறப்பட்டைத் தலைப்பு நிறம் மங்கி உள்ளது போல் இருக்கிறது. பயன்பாடு பகுதிக்கு மட்டும் தனி நிறமும் உகப்பாக இருக்கிறதா தெரியவில்லை. நிற வடிவமைப்பு பற்றிய நல்ல புரிதல் உள்ளவர்களைக் கலந்தாலோசித்துச் செய்வது நல்லது--ரவி 07:39, 27 அக்டோபர் 2010 (UTC)Reply
  • நிறப்பட்டை வார்ப்புருக்களில் வார்ப்புரு பேச்சு:பயன்பாடு என்பதில் மட்டுமே கலந்துரையாடல் தொடர்ந்தது.மற்றவைகளின் வரலாற்றையும் காணவும். அதிக பட்டைகள் நீல நிறத்தோடு இருப்பது உகந்ததாகத் தெரியவில்லை.கோவிலுக்கு வெளியே சுவர்களில் சிவப்புப் பட்டைகள் மட்டும் இருப்பது போல, நீல நிறபட்டைகள் இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. விக்கி நிறமான சாம்பல் நிறமே மேலோங்கி இருக்க வேண்டும் என்பது என் அவா.
  1. முதலில் இதனை அமைத்த போது இரண்டே இரண்டு பட்டைகள் தான் இருந்தன. {.{பொருள்}}-க்கும், {.{மொழிபெயர்ப்பு}}-க்கும்.
  2. பொருள் இருப்பின் நம் தளம் நீலநிறமாகக் காண்பிப்பதால், வெளிர் நீலத்தை பொருள் பட்டைக்கு அமைத்தேன்.
  3. மொழிபெயர்ப்பு சற்று வேறுபட வெளிர் நிறத்தை அமைத்தேன்.
  4. மற்றவைகள் நிறப்பட்டையாக இல்லை.மாற்றங்கள் செய்யப்பட்டது/அறிமுகப்படுத்தப்பட்டது.
இனி இதுபற்றி கலந்தாலோசிப்போம்.பொதுவாக கலந்துரையாடல்கள் சிதறிக்கிடக்கிறது. அதனை ஒருங்கிணைக்க முயற்சி எடுத்தேன். முதன்முதலாகச் செய்யும் போது தவறுகள் வருவது இயல்பே. ஆனால், ஒரு பக்கச்சார்ப்பு என விமர்சிக்கப்பட்டது. நடுநிலையான ஒருங்கிணைப்பை இதுவரை யாரும் செய்து காட்டவில்லை. முந்தைய உரையாடல்களை விட்டு விட்டு, மறந்து, நாம் எந்த கலந்துரையாடலையும் தொடர்வது நம் பணிக்கு சிறப்பைத் தராது என்றே எண்ணுகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக நறகீரன் இம்முறை(<.div>) விக்கிவடிவம் ஆகாது என குறிப்பிட்டுள்ளார். முதலில் அதனை ஏற்க மனம் ஒப்பவில்லை.ஆனால், படங்களை இடும் போது அந்நிறபட்டைகளால் இடைஞ்சல் வருகிறது. விக்கி நிறம் மேலோங்கி இருக்க வேண்டும். கூகுளில் அகரமுதலி,tamildict இதே நீல நிறப்பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. நம் தளம் வேறுபட்டு சிறந்து விளங்க மேற்கூறியவைகளை எண்ணுகிறேன்.எனவே நிறப்பட்டைகள் வடிவமும், நிறமும் மறுபரிசீலனைச்செய்ய வேண்டும்.அதனை நடுநிலையோடு எப்படி ஆரம்பிக்க வேண்டும். சிதறிகிடக்கும் உரையாடல்களை எப்படி ஒருங்கிணைப்பது? இதனைத் துவங்கி வைத்தால், நான் அதனைத் தொகுக்கத் துவங்குகிறேன். --த*உழவன் 02:09, 28 அக்டோபர் 2010 (UTC)Reply
த. உழவன், நிறத்தை மாற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பல ஆயிரம் பக்கங்களைப் பாதிக்கும் மாற்றங்களைத் தன்னிச்சையாகச் செய்ய வேண்டாம் என்றே கேட்டுக் கொள்கிறேன். பேச்சுப் பக்கத்தில் ஓர் அறிவிப்பு இட்டுவிட்டாவது செய்யலாம். நீங்கள் செய்யும் சில வடிவமைப்பு மாற்றங்கள் மீது எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. கூகுள் அகரமுதலியில் இருக்கும் நிறம் என்பதற்காக நாம் அதை ஒதுக்கத் தேவை இல்லை. கூகுள் இது போன்ற நிறங்களைப் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கிறது. எனவே, அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை. --ரவி 08:21, 28 அக்டோபர் 2010 (UTC)Reply
padding:5px என்று style ல் கொடுத்தால் நன்றாக இருக்கும் -- மாகிர் 08:20, 30 அக்டோபர் 2010 (UTC)Reply
ஒலிப்பு

மேலுள்ளபடி மாறும் அப்படிதானே?--த*உழவன் 15:19, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

என்று ஒலிக்கோப்புகளுக்கு இணைப்பு உருவாக்கலாம். ஒரு இணைப்பு தருவதற்கு முன் பொதுவகத்தின் பகுப்பில் ஒலிக்கோப்பு இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், அமெரிக்க, இங்கிலாந்து ஒலிப்புகளுக்கு தனித்தனி வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால், அதற்குரிய பகுப்புகளும் தோன்றும். (எ. கா.) dictionary--தகவலுழவன் (பேச்சு) 02:31, 14 சூலை 2018 (UTC)Reply