பேச்சு:பகடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பகடி என்ற வழக்கு வீடு, நிலம் தரகர்களால் உபயோகிக்கப்படுகிறது. பகடி என்றால் உதா. 100 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வீட்டு உரிமையாளர் பெற்றுக்கொள்வார், பின்னர் நாம் அந்த காலங்களில் வேறொருவருக்கோ, அல்லது நாமோ அந்த சொத்தை அனுபவித்துக்கொள்ளலாம். - Mahir78 08:04, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆமாம் மாகிர். இது மும்பையில் இன்றும் வழக்கம் என்று நினைக்கின்றேன். நான் மும்பையில்

இருந்தபொழுது பலமுறை கேட்டிருக்கின்றேன். ஆனால் இப்பொருளில் தமிழில் வழங்குவதில்லை (எங்கேனும் இந்தி அல்லது வடநாட்டு மொழியாளர்களிட்ம் அவர்கள் பேச்சில் இருக்கலாம், இருந்தால்.). வட மாநிலங்களிலோ, மும்பையிலோ மேலே நீங்கள் சொன்ன் பொருளில் ஆள்வார்கள் என்று சொல்லுவது தேவை என்று நினைத்தால், அப்பொருளையும் சேர்க்கலாம். இப்பொருளின் மூலம் தெரிந்தால் கூறுங்கள். இது உருது/இந்திச்சொல்லா, பாரசீகச் சொல்லா, அரபுச்சொல்லா அல்லது ச்மசுக்கிருதச்சொல்லா என்று தெரியவில்லை. தமிழில் பகர் என்றால் மாற்றீடாக என்று பொருள். மிகவும் பயனுடைய பொருள். இதில் வரும் கடைசி ர் என்னும் எழுத்தை இந்தியாவின் கிழக்குப் பகுதி மக்கள் நுட்பமான நுனிநாக்கு துடிப்பான டகரமாக ஒலிப்பர். கரக்பூர் என்னும் ஊரின் பெயரை கLடக்பூர் என்று கூறுவர். இதே போல் இந்தி நடிகை செ'யபாதுரி (நடிகர் அமித்தா ப'ச்சன் மனைவி) அவர்கள் பெயரையும் செ'யபா'துLடி என்பார்கள். அப்படி பகர் என்ன்னும் சொல் பகடி ஆயிற்றா என்றும் நினைக்கின்றேன். இந்தி, வங்காளீ,, காசுமீரி போன்ற வடநாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான தமிழ்-திராவிடச் சொற்கள் உள்ளன. நாம் களம் (குறிப்பாக நெற்களம்) என்பதை அசாமி மொழியிலும், காசுமீர மொழியிலும் மராட்டி போன்ற பற்பல வட இந்திய மொழிகளில் (போர்)அடித்து உமியை நீக்கும் களத்தையே குறிக்கும். இது தமிழில் இருந்து அவர்கள் கடன் பெற்ற சொல் அல்ல. இந்தியா முழுவதுமோ, அதன் பெரும்பகுதிகளோ (பாக்கித்தான் உட்பட - எ.கா. அங்குள்ள பிராஃகுயி மொழி)திராவிட மொழிக்குடும்ப மொழிகள் பேசப்பட்டதால் அதைச் சேர்ந்த சொல்லாக இருக்கும். --செல்வா 12:15, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பகடி&oldid=774118" இலிருந்து மீள்விக்கப்பட்டது