படுவட்டு
Appearance
தமிழ்
[தொகு]படுவட்டு, (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- குறும்புத்தனம் மிக்க
- விளையாட்டுத்தனமான
- தொந்தரவு கொடுக்கின்ற
- துட்டத்தனமான
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- mischievous
- troublesome
விளக்கம்
[தொகு]- என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தம் வீடுகளிலும், பிறர் வீடுகளிலும் பொருள்களை எடுத்தும், உடைத்தும், கண்டபடி கீழே இரைத்தும், சுவர்களில் கிறுக்கியும் துட்டத்தனம் செய்யும் சிறுவர் சிறுமியரைக் குறிக்கவே இந்தச்சொல்... அரிதாக பெரியவர்களையும் இந்தச்சொல்லால் குறிப்பிடுவார்கள்.
பயன்பாடு
[தொகு]- முருகேசன் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சாயங்காலம் நம் வீட்டிற்கு வருகிறார். கீழே ஒரு பொருளையும் வைக்காதே... எல்லாவற்றையும் எட்டாத உயரத்தில் வைத்துவிடு. அவருடைய கடைசி பிள்ளை சுப்பு மகா 'படுவட்டு'. எதையாவது உடைத்துவைப்பான்... ஒன்றும் சொல்லமுடியாது.