உள்ளடக்கத்துக்குச் செல்

படுவட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுவட்டு, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. குறும்புத்தனம் மிக்க
  2. விளையாட்டுத்தனமான
  3. தொந்தரவு கொடுக்கின்ற
  4. துட்டத்தனமான

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. mischievous
  2. troublesome

விளக்கம்[தொகு]

  • என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தம் வீடுகளிலும், பிறர் வீடுகளிலும் பொருள்களை எடுத்தும், உடைத்தும், கண்டபடி கீழே இரைத்தும், சுவர்களில் கிறுக்கியும் துட்டத்தனம் செய்யும் சிறுவர் சிறுமியரைக் குறிக்கவே இந்தச்சொல்... அரிதாக பெரியவர்களையும் இந்தச்சொல்லால் குறிப்பிடுவார்கள்.

பயன்பாடு[தொகு]

  • முருகேசன் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சாயங்காலம் நம் வீட்டிற்கு வருகிறார். கீழே ஒரு பொருளையும் வைக்காதே... எல்லாவற்றையும் எட்டாத உயரத்தில் வைத்துவிடு. அவருடைய கடைசி பிள்ளை சுப்பு மகா 'படுவட்டு'. எதையாவது உடைத்துவைப்பான்... ஒன்றும் சொல்லமுடியாது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=படுவட்டு&oldid=1221489" இலிருந்து மீள்விக்கப்பட்டது