எழுத்தாணிப்பூண்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Prenanthes Sarmentosa..(தாவரவியல் பெயர்) &
- Launaea sarmentosa..(தாவரவியல் பெயர்)
எழுத்தாணிப்பூண்டு...
பொருள்
[தொகு]- இராவணன் மீசை (ஒரு புதர்த் தாவர வகை மூலிகை)
- கூத்தன்குதம்பை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a bushy herbal plant.
விளக்கம்
[தொகு]- இந்தப் புதர்த் தாவர மூலிகை ஆஃப்ரிகாவின் கிழக்குக் கரையோரப்பகுதியிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரையிலான பகுதியைச் சேர்ந்தது...உணவாகவும் மருந்தாகவும் பயனாகிறது...இந்த மூலிகையால் நாட்பட்ட மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், புடை, கிரந்தி ஆகிய நோய்கள் நீங்கும்...
- இந்தப் பூண்டை மைய அரைத்து வேளைக்கு அரை முதல் ஒரு கொட்டைப்பாக்களவு தினம் இரண்டு வேளைமூன்று நாட்கள் கொடுக்க, உந்தியிலுள்ள சீதளம் நீங்கி குடலிலுள்ள விரணம் ஆறும்...
- மேற்கண்ட அளவின்படி சாப்பிடும்போது வழக்கம்போல் அல்லாமல் பழய மலம் வெளியேற வேண்டும்...இல்லையென்றால் அளவை சிறிது அதிகப்படுத்திக்கொள்ளலாம்...
- இந்த இலைகளின் சாறு எடுத்து சமனெடை நல்லெண்ணெயோடு ஒரு பழகிய மட்பாண்டத்தில் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு சொறி, சிரங்கிற்குத் தடவிவர விரைவில் ஆறும்...
- தமிழ்ஆதாரங்கள்.[1]