உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்தாணிப்பூண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எழுத்தாணிப்பூண்டு
எழுத்தாணிப்பூண்டு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எழுத்தாணிப்பூண்டு...

பொருள்

[தொகு]
  1. இராவணன் மீசை (ஒரு புதர்த் தாவர வகை மூலிகை)
  2. கூத்தன்குதம்பை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a bushy herbal plant.

விளக்கம்

[தொகு]
  • இந்தப் புதர்த் தாவர மூலிகை ஆஃப்ரிகாவின் கிழக்குக் கரையோரப்பகுதியிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரையிலான பகுதியைச் சேர்ந்தது...உணவாகவும் மருந்தாகவும் பயனாகிறது...இந்த மூலிகையால் நாட்பட்ட மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், புடை, கிரந்தி ஆகிய நோய்கள் நீங்கும்...
  • இந்தப் பூண்டை மைய அரைத்து வேளைக்கு அரை முதல் ஒரு கொட்டைப்பாக்களவு தினம் இரண்டு வேளைமூன்று நாட்கள் கொடுக்க, உந்தியிலுள்ள சீதளம் நீங்கி குடலிலுள்ள விரணம் ஆறும்...
  • மேற்கண்ட அளவின்படி சாப்பிடும்போது வழக்கம்போல் அல்லாமல் பழய மலம் வெளியேற வேண்டும்...இல்லையென்றால் அளவை சிறிது அதிகப்படுத்திக்கொள்ளலாம்...
  • இந்த இலைகளின் சாறு எடுத்து சமனெடை நல்லெண்ணெயோடு ஒரு பழகிய மட்பாண்டத்தில் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு சொறி, சிரங்கிற்குத் தடவிவர விரைவில் ஆறும்...


  • தமிழ்ஆதாரங்கள்.[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுத்தாணிப்பூண்டு&oldid=1912173" இலிருந்து மீள்விக்கப்பட்டது