பந்தி மரியாதை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]- பந்தி மரியாதை, பெயர்ச்சொல்.
- குழுவோடு அமர்ந்து உண்ணும் முறை
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்--வடமொழி--பங்க்தி=பந்தி...பந்தி எனில் ஒரு குழுவாக பல பேர்களுடன் அமர்ந்து உணவு உண்ணல்...அப்படிச் செய்யும்போது சில நியதிகளைப் பின்பற்ற வேண்டும்...ஒருவர் இலையில் உணவுப் பரிமாறப்பட்டவுடன் சாப்பிடத் தொடங்கக்கூடாது...அனைவருக்கும் எல்லாம் பரிமாறப்பட்டபின் எதாவது பிரார்த்தனைகள், சடங்குகள் செய்யப்படுகின்றனவா எனக் கவனித்து, அவற்றில் ஈடுபட்டு அல்லது அவை முடியும்வரை காத்திருந்து, பெரியவர்கள் சாப்பிட ஆரம்பித்தப்பிறகுதான் சாப்பிடத்தொடங்கவேண்டும்...சாப்பிடும்போது மற்றவர்களுக்கு உபத்திரவமாக சப்தத்தோடு, உறிஞ்சியும், நக்கியும், கையை உணவில் அசிங்கமாகத் துழாவிக்கொண்டும் சாப்பிடக்கூடாது...தான் உணவு உண்டுமுடித்தாலும் பெரியவர்கள் எழுந்தபிறகுதான் இலையைவிட்டு எழுந்திருக்க வேண்டும்...கை அலம்பிக்கொண்டபிறகு அடுத்து கைக் கழுவிக்கொள்ள நிற்பவருக்குத் தண்ணீர் மொண்டுக் கொடுக்கவேண்டும்... இப்படி பல நியதிகள் உள்ளன...அவைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதே பந்தி மரியாதை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- rules to be followed while having food with a group of persons.