சிரஞ்சீவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓம்-இந்து சமயச்சின்னங்களில் ஒன்று
ஓம்-தமிழில்

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---चिरञ्जीवी---சி1ரஞ்சீவி--வேர்ச்சொல்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிரஞ்சீவி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சாகாவரம் பெற்ற இந்துப் புராணப் புருடர்கள் எழுவர்
  2. ஓர் ஆசிச் சொல்
  3. சிரச்சேதக்கருவி
  4. சிரசுவெட்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. seven immortals specified in hindu scriptures
  2. a word to bless young ones.
  3. executioner's axe

விளக்கம்[தொகு]

  • சமசுகிருதத்தில் चिर.சி1 என்றால் நீண்ட நெடுங்காலம் எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் சீ(ஜீ)வித்திருப்பதைக் குறிக்கும்.. சாகாவரம்பெற்று என்றென்றும் உயிர் வாழ்பவர் என்று பொருள்...இந்து புராணங்களின்படி ஏழுபேர் சாகாவரம் பெற்று இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்...இவர்களை சிரஞ்சீவி என்பர்....அவர்களுடைய விவரம் கீழ்கண்டவாறு உள்ளது:-
  1. திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனாவதாரத்தில் திருமாலின் திருத்தாளை மூன்றாவது அடியாகத் தலைமேல் ஏந்தி திருமாலால் அமுக்கப்பட்டு பாதாள உலகிற்குச் சென்றுவிட்ட மகாபலி சக்கரவர்த்தி
  2. திருமாலின் ஆறாவது அவதாரமான பரசுராமன்
  3. சிவபெருமானின் தீவிர பக்தனான மார்கண்டேயன்
  4. இராமபிரானின் தாசானுதாசனான அனுமன்
  5. மகாபாரதத்தில் குரு துரோணாச்சாரியின் மகன் அசுவத்தாமன்
  6. மகாபாரதத்தில் மன்னர்களின் படைகளின் குருவான கிருபாசாரியார்
  7. மகாபாரதத்தை எழுதி உலகிற்களித்த வியாசர்
  • இலங்கையின் அரசனான இராவணனின் தம்பி விபீடணன் கடந்துபோன திரேதா யுகம் வரை மட்டுமே இவ்வுலகில் உயிர்வாழ வரம் பெற்றிருந்தார்...ஆனாலும் அந்த யுகம் போனபின்னரும் மிக நீண்டநெடுங்காலம் பூவுலகில் இருந்ததால், அவரும் மற்றவர்களோடு சிரஞ்சீவியாகவேக் கருதப்படுகிறார்...
  • தற்காலத்தில் பெரியோர் சிறியோரான ஆண் மக்களுக்கு ஆசி வழங்கும்போது சிரஞ்சீவியாக இரு என வாழ்த்துவது வழக்கம்...பொருள் 'நூறாண்டு வாழ்க' என்பதாகும்...பெண்களை வாழ்த்தும்போது சௌபாக்கியவதியாக இரு' என்பர்...
  • பண்டைய நாட்களில் மரண தண்டனைப் பெற்றவர்களின் தலையை வெட்டப் பயனான சிரசுவெட்டி என்னும் கொலைவாளும் சிரஞ்சீவி எனப்பட்டது...அதாவது சிரசை (தலையை) சீவும் கருவி என்பதாம்...
  • இதையும் காண்க...சிரஞ்சீவியர் [[1]]


( மொழிகள் )

சான்றுகள் ---சிரஞ்சீவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரஞ்சீவி&oldid=1994269" இலிருந்து மீள்விக்கப்பட்டது