கோவில்மணி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கோவில்மணி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- கோவிலின் பெரிய மணி.
- மிக விலை அதிகமானது
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- temple bell
- expensiveness
- high cost
விளக்கம்[தொகு]
- கோவில்களில் பூசைக் காலங்களில் அடிக்க நிறுவப்பட்டிருக்கும் பெரிய அளவிலான மணிக்கு கோவில்மணி என்றுப் பெயர்...உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மணியின் நாக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்டக் கயிற்றை விட்டுவிட்டு இழுத்து , பூசைக் காலங்களில்,மங்களகரமான ஒலியை எழுப்புவர்...தற்காலத்தில் வேறு உபகரணங்களைக்கொண்டும் இயக்குகின்றனர்...இன்னும் சில கோயில்களில் மணியோசை எழுப்பும் மின்சாதனங்களையும் பொருத்தியுள்ளனர்...
- சென்னை வட்டாரத்தில் 'கொச்சை மொழியாக' மிக விலை அதிகம் என்றுக் குறிப்பிட கோயில்மணி என்பர்...சாதாரண விலையில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு அதிகமான விலை தரவேண்டியிருந்தால் அது கோயில்மணியைப் போன்றது!... நாம் சாதாரணமாகப் பார்க்கும் மணியைவிட கோயில்மணி மிகப் பெரியதாக இருக்கிறது அல்லவா?
பயன்பாடு[தொகு]
- அதிகாலையில் கோவில்மணியின் ஓசை கேட்க மிக இனிமையாக இருக்கிறது...
- அந்தக் கடையில் ஒன்றும் வாங்காதே!!...அங்கு எல்லாம் கோயில்மணிதான்.