அரையன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அரையன், பெயர்ச்சொல்.
- அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
- குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளுர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெற்றுள்ளனர். அரையன் பட்டம் பெற்றோர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஆவணக் கையெழுத்திட்டோராக இருப்பதை அறியமுடிகின்றது.
- அரையன் என்ற பட்டம் ராயன் எனவும் சுட்டப் பெறுகின்றது. ~ராஜர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபே ராயர எனக் கூறப்படுவதாகத் துரை அரங்கசாமி (1980: 288) குறிப்பிடுவதும் ஏற்புடைய கருத்தாகும்.
பொருள் - தற்காலம்
[தொகு]*தற்காலத்தில் (2020<) இச்சொல்லானது படைத்துறை நிலைகளை தமிழில் வழங்குவதற்காக 'அர்' விகுதி(பலர்பால்) சேரக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எ.கா: பேரரையர், கொச்சரையர், சிற்றரையர் போன்றன.
பல வித 'அரையன்'கள்
[தொகு]- அரையன் = அரசு அதிகாரிகள்
- அதிஅரையன் = அரசு தலைமை அதிகாரிகள்
- பேரரையன் = அரையனை விட பதவியில் உயர்ந்தோர்
- பல்லவரை/பல்லவதரையன் = பல்ல வழி வந்த அரையன்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
- வில்லவதரையன் = சேர மனர்களைச் சிறப்பித்து வழங்கப்பட்ட பட்டம்
- மீனவதரையன் = பாண்டிய அரச அதிகாரிகள்
- ஈழதரையன் = ஈழ நாட்டை வெல்ல வேண்டும் என்னும் அவாவினால் வழங்கப்பட்ட பட்டம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- depends on the place of work
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +