அரையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அரையன், பெயர்ச்சொல்.
  1. அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
  2. குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளுர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெற்றுள்ளனர். அரையன் பட்டம் பெற்றோர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஆவணக் கையெழுத்திட்டோராக இருப்பதை அறியமுடிகின்றது.
  3. அரையன் என்ற பட்டம் ராயன் எனவும் சுட்டப் பெறுகின்றது. ~ராஜர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபே ராயர எனக் கூறப்படுவதாகத் துரை அரங்கசாமி (1980: 288) குறிப்பிடுவதும் ஏற்புடைய கருத்தாகும்.

பொருள் - தற்காலம்[தொகு]

*தற்காலத்தில் (2020<) இச்சொல்லானது படைத்துறை நிலைகளை தமிழில் வழங்குவதற்காக 'அர்' விகுதி(பலர்பால்) சேரக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எ.கா: பேரரையர், கொச்சரையர், சிற்றரையர் போன்றன.

பல வித 'அரையன்'கள்[தொகு]

  1. அரையன் = அரசு அதிகாரிகள்
  2. அதிஅரையன் = அரசு தலைமை அதிகாரிகள்
  3. பேரரையன் = அரையனை விட பதவியில் உயர்ந்தோர்
  4. பல்லவரை/பல்லவதரையன் = பல்ல வழி வந்த அரையன்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்
  5. வில்லவதரையன் = சேர மனர்களைச் சிறப்பித்து வழங்கப்பட்ட பட்டம்
  6. மீனவதரையன் = பாண்டிய அரச அதிகாரிகள்
  7. ஈழதரையன் = ஈழ நாட்டை வெல்ல வேண்டும் என்னும் அவாவினால் வழங்கப்பட்ட பட்டம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. depends on the place of work

சொல்வளம்[தொகு]

அரையர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://web.archive.org/web/20210508213022/http://aayvagam.journal.thamizhagam.net/issues/2017/June%202017/6%20Article%20June%202017.pdf

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரையன்&oldid=1979640" இலிருந்து மீள்விக்கப்பட்டது