திருவாழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திருவாழி:
சுதர்சனாழ்வார்/சக்கரத்தாழ்வார் என்னும் தெய்வத் தோற்றத்தில்
திருவாழி:
அனுமன் சீதைக்கு இராமனின் திருவாழியை (கணையாழி) காண்பிக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருவாழி, பெயர்ச்சொல்.
  • (திரு+ஆழி)
  1. திருமாலின் சக்கராயுதம்
    (எ. கா.) திருவாழிசங்கு திருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1).
  2. கணையாழி
    (எ. கா.) திருமுகத்தையும் திரு வாழியையும் தந்தருளென்று கூற (சீவக. 1032, உரை).

விளக்கம்[தொகு]

  • இறைவன் திருமாலின் ஐந்து படைகளுள் ஒன்றானதும், அவர் தன் வலது மேற்புறக்கையில் ஏந்தியிருப்பதுமான ஆயுதம் திருவாழி எனப்படும்...சுதர்சனம் என்றும் பெயர்...வைணவ சம்பிரதாயத்தில் திரிவாழியையே ஒரு தெய்வமாக சுதர்சனாழ்வார் என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் கொண்டாடுவர்...சில வைணவக் கோயில்களில் திருவாழிக்குத் தனி சன்னதிகளுமுண்டு...நாளும், கோளும் தங்களுக்குச் சரியில்லை என்று நினைக்கும் வைணவர்கள், தம் குடும்ப மேன்மைக்காக சுதர்சன ஓமம் என்றொரு சமய வழிபாட்டை தத்தம் வீடுகளில் நடாத்திக்கொள்வர்...
  • அதிகாரம், அடையாளம் இவற்றைக்குறிக்கும் முத்திரை/இலச்சினையிட்ட கணையாழி எனப்படும் மோதிரத்திற்கும் திருவாழி என்றுப்பெயர் உண்டு...அசோக வனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்ட இராமனின் பத்தினி சீதைக்கு, அனுமன் தான் இராமனின் தூதுவனே என்று உறுதிப்படுத்தும்முகமாக இராமனின் முத்திரைப்பொறித்த கணையாழியைக் காண்பித்தார்...அதனால் திரு என்னும் புனிதச்சொல் சேர்ந்து ஆழி(சக்கரம்) போலிருப்பதால் கணையாழி திருவாழி எனப்பட்டது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. discus Viṣṇu
  2. signet-ring


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவாழி&oldid=1286285" இலிருந்து மீள்விக்கப்பட்டது