தளிகை விடுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தளிகை விடுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கோயிலில் சித்திரான்னம் நிவேதித்தல்--- Vaiṣṇ. வைணவம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intransitive verb
விளக்கம்
[தொகு]- திருவைணவர்கள் பயன்படுத்தும் சொல்...பெருமாள் கோவில் சுவாமிகளுக்கு தளிகை விடுகிறேன் என்று ஏதோ ஒரு காரியத்திற்காக, இன்ன உணவை நிவேதனம் செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டு, குறிப்பிட்ட நாளில் வெண் பொங்கல், சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, கதம்பசாதம், தத்தியன்னம் போன்றதொரு சித்திரான்னத்தை அர்ச்சகரால் சுவாமிக்கு நிவேதித்து பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்வர்...தளிகை எனில் சமையல்/சமைத்த உணவு எனப்பொருள்...பெருமாளுக்கு-சுவாமிக்கு-நிவேதனம் செய்தபிறகு சித்திரான்னத்தைக் கோவிலுக்கு அப்போது வந்திருக்கும் பக்தர்களுக்கும், அர்ச்சகர் குடும்பத்தாருக்கும் பிரசாதமாகப் பகிர்ந்துக் கொடுத்து, மீதமான சித்திரான்னத்தை வீட்டிற்குக் கொணர்ந்து குடும்ப உறுப்பினர், சுற்றம், நண்பர்களோடுப் பகிர்ந்து உண்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +