பயனர்:Thennakoan
Appearance
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்பதில் உள்ள தென்; "நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்." என்பதில் உள்ள கோன்; இவ்விருசொற்களின் இணைப்பே என் பெயர்.
- பயனர்பெயர்: தென்னகோன்
- பிறப்பு: தென்னாசியாவில், இந்திய துணைக்கண்ட நிலத்தகட்டின்; தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிரிந்த, ஒரு துண்டில்.
- சமயம்: சைவ சமயம் (இருப்பினும், சமய சார்பற்றவன்)
- குலத்தொழில்: தமிழர் நிலத்திணைகளுக்கமைய, வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின்; தொழில்சார் நிலையில், நெல்லுயரப் பாடுபடும் வேளாளன்
- தொழில்: முனைவோன்
- குடி: தமிழ்குடி
- போற்று: "யாதும் ஊரே யாவரும் கேளிர்." என்பதற்கமைய, எந்நாட்டவர்க்கும் இறைவனை போற்றுபவன் (சக மனிதனை நேசிக்கும் மனிதநேயன்)
- விருப்பு: வரலாற்றாய்வு, மொழியாய்வு, சொல்லாய்வு
- "சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்! - என்றன் உடல்
- சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்!
- பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்!
- பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்!
- ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்;
- ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்."