உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:உருசியம்-உரிச்சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இரசியப் பகுப்புகளில் விக்கியிடையிணைப்பு ஐயம்

[தொகு]

(செந்தியின் பேச்சுப்பக்கத்தில் இருந்து.)

இரசியப் பகுப்புகள் உருவாக்கும் போது, ஒரு முறை ஆங்கில விக்சனரியில் இருக்கும் பகுப்புகளைக் காணவும். பின்பு, அங்குள்ள விக்கியிடைப்பகுப்பு இணைப்புகளையும், இங்கு உருவாக்கும் பகுப்பிலும் இணைக்கக் கோருகிறேன். ஏனெனில், உங்கள் உழைப்பை, பிற மொழி விக்சனரியர்களும் காண இது வழிவகுக்கும். தற்போது இயங்கும் விக்கியிடைத் தானியங்கிகள், சொற்களை மட்டுமே சிறப்பாக இணைக்கும். அச்சொற்களுக்குரியப் பகுப்புகளை, சரிவர இணைப்பதில்லை என்பதால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

நான் பகுப்பு:உருசியம்-பெயர்ச்சொற்கள் என்பதில், அத்தகைய விக்கியிடைப் பகுப்பு இணைப்புகளை இங்கும், ஆங்கிலவிக்சனரியிலும் உருவாக்கினேன்.

ஆனால்,பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் உருவாக்கும்போது, சிறுகுழப்பம் என்னுள் எழுந்துள்ளது. ஆங்கில விக்சனரியில் Russian adjectives , Russian adverbs என உள்ளன. இதில் Russian adjectives என்பதிலுள்ள, விக்கியிடைப் பகுப்பு இணைப்புகளை, .பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் என்பதில் சேர்த்துள்ளேன். அது சரியா? அல்லது பகுப்பு:உருசிய பெயர் உரிச்சொற்கள் என்பதில் சேர்க்க வேண்டுமா? Russian adverbs என்பதன் விக்கியிடை பகுப்பு இணைப்புகளை, பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதில் சேர்க்கலாமா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஆங்கில விக்சனரியில் இரசியச் சொற்களைப் பகுத்திருப்பது சரியான முறையா? ஐயம் தீர்க.--05:48, 13 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

-அவற்றில் மாற்றம் தேவைதான், பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்,
Russian adjectives = பகுப்பு:உருசிய பெயர் உரிச்சொற்கள் ;
Russian adverbs = பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் ;
இங்கு பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதற்கு செல்வா பயன்படுத்திய பகுப்பு:உருசியம்-வினையடைகள் என்பதையே பயன்படுத்துகின்றேன், எனவே பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதை நீக்கலாம்.
அதற்கு முன்னர் பொதுவாகவே.. உரிச்சொல் என்பதற்குள் பெயர் உரிச்சொல், வினையடை அடங்குமா அல்லது பெயர் மட்டும்தானா என்பது அறிந்து பகுப்பு:உரிச்சொற்கள் சீர் படுத்தவேண்டிய தேவை உள்ளது.
நான் அறிந்தவரை முன்னர் வினையெச்சம் என்றே படித்ததாக நினைவு. இக்காலத்தில் வினையடை என்று பயன்படுத்தப்படுகின்றது. அப்படியாயின் பெயர் உரிச்சொல்லும் பெயரடை என்றல்லவா பயன்படுத்தவேண்டும், எனவே // பெயர் உரிச்சொற்கள், வினை உரிச்சொற்கள் // என்று அல்லது // பெயரடை, வினையடை // என்று பயன்படுத்தல் வேண்டியது என்று கருதுகிறேன். இலக்கணம் நன்கு தெரிந்தோர் இதனை விளக்கினால் அனைத்து விக்சனரிச் சொற்களுக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம். --சி. செந்தி 17:10, 18 சூன் 2011 (UTC)Reply