பயனர் பேச்சு:Drsrisenthil

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொகுப்பு

ஆவணகம்

உருசிய மொழியா இரசிய மொழியா?[தொகு]

உருசியர்/இரசியர் தங்கள் மொழியை русский язык என்கிறார்கள். இதன் ஒலிப்பை நீங்களே என்னைவிட நன்கு அறிவீர். இதன் ஒலிப்பு russkiy yazyk [ˈruskʲɪj jɪˈzɨk] என்று கொடுத்துள்ளவாறே நானும் உணர்கிறேன். காறொலி சகரத்தை ச்7 = s என்றும், кий என்பதைக் க்யீ அல்லது கிஇய் என்றும் கொண்டால் ரச்7க்யீ யிசி8க் என்பது போல ஒலிக்க வேண்டும். ரசியா என்பது Россия என்பதற்கு நெருக்கம்தான். ஆனால் தமிழ்நாட்டில் ருசியா, என்றும் உருசியா என்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இன்று ரஷ்யா என்று பலரும் எழுதுகின்றனர். ரசியா என்பதை இரசியா என்று எழுதுவது மிகவும் பொருத்தம். உருசியா என்பதில் பழமையான வழக்கு என்பதையும் தாண்டி ஒரு நுட்பமான பொருத்தம் உண்டு. உரு என்றால் பெரியது என்று தமிழில் பொருள் (தொல்காப்பியச் சொல்). உலகிலேயே மிகப்பெரிய நாடாகிய இதனை உருசியா என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதாக எனக்குப் படுகின்றது. ஆகவே இரசியா, உருசியா ஆகிய இரண்டுமே இரு வெவ்வேறு கோணங்களில் சரியானதாகவோ பொருத்தமானதாகவோ எனக்குப் படுகின்றது. இரண்டும் எனக்கு முழு உடன்பாடே. --செல்வா 21:08, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

  • பேச்சு:இரசியா என்பதில் தொடர்வோம். ஏனெனில், ஆலமரத்தடியின் பக்க அளவினை குறைக்கவும், குறிப்பான சொல் பற்றிய உரையாடலை, அந்தந்த சொல்லின் உரையாடற்பக்கத்தில் உரையாடுவதே நமது வழக்கமான முறைமை ஆகும். நன்றி. வணக்கம்--த*உழவன் 02:38, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

நான் அங்கு தொடர்கின்றேன்.--சி. செந்தி 22:00, 30 ஆகஸ்ட் 2010 (UTC)

பிறமொழிகள் பற்றி[தொகு]

செந்தி, உங்களுக்கு பேச்சு:сердце என்னும் பக்கத்தில் ஒரு குறிப்பு இட்டிருக்கின்றேன். பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 13:49, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

அருள்கூர்ந்து, தயங்காமல் என்னைச் செல்வா என்றே அழையுங்கள், குறிப்பிடுங்கள். "அவர்கள்" என்னும் பின்னொட்டோ அல்லது வேறு எந்தப் பின்-முன் ஒட்டுகள் எதுவும் வேண்டாம் (அவை முறைப்படி எங்கேனும் குறிக்க வேண்டிய சில இடங்களில் மட்டுமே). இங்கு பணியாற்றும் நாம் யாவருமே பொதுநல பங்களிப்பாளர்கள்தான் :) உங்கள் நல்லுணர்வுக்கு என் நன்றி :) --செல்வா 17:50, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

- அழைக்கும் விதத்தைத் தெளிவு படுத்தியமைக்கு நன்றி செல்வா.--சி. செந்தி 17:57, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உருசியச் சொற்கள்[தொகு]

உருசியச்/இரசியச் சொற்களுக்கு улей என்னும் பக்கத்தில் இருப்பது போன்று பக்கம் அமைத்தால் நன்றாக இருக்குமா என உங்களை எண்ணிப்பார்க வேண்டுகிறேன். தொடர்பான சொற்கள், வழிவந்த பிறசொற்கள் என்பன போன்று ஏதேனும் தேவைக்கு ஏற்ப பின்னர் இன்னும் பகுதிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். சில இடங்களில் பொருள் ஒப்புச் சொற்கள் (பொருள் இணைச் சொற்கள்), எதிர்ச்சொற்கள், எதிர்ப்பொருள் சொற்கள் என்றும் சேர்க்க வேண்டியிருக்கலாம். சொற்பிறப்பு என்பதை விளக்கத்தின் ஒரு உட்பகுதியாகவும் கருதி சேர்க்கலாம். --செல்வா 18:00, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

    • பகுப்பு இருவகையாக இருப்பதை முன்னரே பார்த்தேன். இதனைச் சரி செய்ய வேண்டும். இது பற்றி சிறிது கலந்துரையாட வேண்டும். (1) மொழியின் முழுப்பெயர்-பகுதியின்பெயர் (எ.கா கன்னடம்-பெயர்ச்சொற்கள்) என்று இருக்க வேண்டுமா அல்லது (2) மொழியின் பெயர் உருசிய, பிரான்சிய, கன்னட- எனச் சரியான முன்னொட்டுடன் வர வேண்டுமா? இதே போல உருசியம்-உடலுறுப்புகள் என்று இருந்தால் போதுமா அல்லது உருசியம்-உடலுறுப்புச் சொற்கள் என்று இருக்க வேண்டுமா? இதையெல்லாம் ஆல மரத்தில் இட்டு உரையாட வேண்டும். இது இப்போதைக்கு.
    • செந்தி улейஎன்னும் பக்கத்தில் ஒலிப்புக்கான பகுதிகளைச் சேர்த்திருக்கின்றேன். பார்கவும். ஒலிக்கோப்பும் வேலை செய்கின்றது. ஆகவே அந்த ஒலிப்பின் படியும் தமிழ் எழுத்தால் காட்டும் ஒலிப்பைச் சற்று மாற்றி எழுதியுள்ளேன். எந்த மொழியும் மற்றொரு மொழியின் ஒலிப்புகளைக் காட்ட இயலாது. ж (பிரழ்சினேவ்) என்னும் சொல்லில் வரும் ஒலியை அனைத்துலக ஒலியன் குறியில் ʐ என்று இட்டுக் காட்டுகின்றனர். நாம் ழ்3 என்று காட்டலாம். உருசிய ஒலிக்குறிப்புகள் என்பதற்கு ஈடாக தமிழில் ஒரே நாளில் வடிக்கலாம். நீங்களும், நானும், சிறீதரன் கனகும் கலந்து பேசி வடிக்கலாம். அதன் பின் அப்பக்கத்துக்கு உள்ளிணைப்பு தருவது எளிது. ஆங்கிலத்துக்கு இது போல dado2 என்னும் பக்கத்தில் தந்துள்ளேன். பார்க்கவும். ழ்3 என்று குறிப்பிட்டாலும், அனைத்துலக ஒலிப்புக் குறியாகிய ʐ என்பதால் குறிப்பிட்டாலும், முதல் மொழியின் "жэ" என ஒலிக்கப்பெறும் ж என்னும் எழுத்தாலே குறித்தாலும், அந்த ஒலியைக் கேட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒரு குறியுடன் (அது எந்தக்குறியாக இருந்தாலும்) பொருத்தி நினைவில் கொள்ள முடியும். இதே எழுத்து இரட்டித்து வருகையில் жж சற்று மாறுபட்டு ஒலிக்கும், இதனை அனைத்துல ஒலியன் குறி ʑʑ என்று இட்டுக்காட்டுகின்றது. ஒலிப்பைக் குறிக்க சீர்தரம் செய்து நாம் வகுத்துக்கொள்ளலாம். --செல்வா 20:19, 9 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தானியங்கிச் சோதனை-1[தொகு]

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவிக்கலாம். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:35, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இரசியதமிழ் அகரமுதலி[தொகு]

  • நீங்கள் இரசியதமிழ் அகரமுதலியை உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது.தானியங்கி முறையிலும் நீங்கள் உங்கள் பதிவுகளைச் செய்யலாம். அதன்மூலம்உங்கள் நேரம் வெகுவாக மீதமாகும். உங்களுக்கு அதில் விருப்பம் உண்டா?{{சிறியது|--த*உழவன் 13:24, 24 அக்டோபர் 2010 (UTC)}[பதிலளி]
    • நிச்சயமாக!! செய்யும் முறையைக் காட்டித்தந்தால் இலகுவாக இருக்கும். மேலும் நீங்கள் உருவாக்கிய விக்சனரி:புதிய_பக்கத்தை_உருவாக்குதல் உருசிய சொற்களில் இரண்டுதடவை பெயர்ச்சொல் உள்ளது, அதில் ஒன்று வினையாக இருந்தால் நல்லது, மேலும் உருசியச் சொல்லிற்குரிய படிவத்தில் வார்ப்புரு:ஆண் (ஆண்பால்) (பெண்) (பெண்பால்) வார்ப்புரு:நடு (நடுநிலைப்பால் அல்லது நடுப்பால்) என வார்ப்புருக்களை இணைத்தால் புதிய சொற் பதிவின் போது தேவையற்றதை நீக்கி நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். --சி. செந்தி 13:44, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • (இங்கு துவங்கப்பட்டதால், இங்கேயே உரையாடலைத் தொடர்வோம்...படிப்பதற்கு வசதியாக இருக்கும்.)நீங்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து விடுகிறேன். சுந்தர்,மாகிர் போன்றோர் ஆங்கில விக்சனரியின் வசதிகளை அருமையாக உங்களுக்கு அமைத்து தர முடியும். எனினும், எனக்கு அவர்கள் கற்றுத் தந்த தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஆனந்தமே. உங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால், வாரம் ஒருமுறையேனும் தவறாமல் குறிப்புகளைத் தர முடியும். என்னிடம் இரசிய-தமிழ் ஆங்கில அகராதி ஒன்று உள்ளது. முன்னேற்ற பதிப்பகம்-தமிழில்..பாஸ்கரன் மொழிபெயர்த்துள்ளார்.உங்களிடம் அது உள்ளதா? 2100அடிப்படைச் சொற்கள். தொடர்வோம்.. தற்போது தானியங்கி பதிவேற்றத்தில் முதன்முறையாக ஈடுபடுவதால் நிறைய நேரம் எனக்குத் தேவைப்படுகிறது. பிறகு சந்திப்போம். வணக்கம்எனது மின்னஞ்சல் tha.uzhavan ATgmailCOM --த*உழவன் 14:01, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் ஒன்று அனுப்புகிறேன்.--சி. செந்தி 14:06, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஒலிப்பு-வார்ப்புரு[தொகு]

подарок இச்சொல்லில் ஒலிப்புக்குறிப்புகளுக்காக வார்ப்புருவினை உருவாக்கியுள்ளேன். அதன் பயன்பாடு முன்பு விட எளிமையாக இருக்குமென நம்புகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல்?--த*உழவன் 18:24, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

  • சரி. உங்களுடன் skype அல்லது கூகுள் மூலம் கலந்துரையாட எண்ணுகிறேன். எந்நேரம் உங்களுக்கு உகந்தது?அனைத்துலக நேரக்குறியீட்டில்(UTC)குறிப்பிடவும். எனக்கு இணைய வேகம் காலைநேரத்தில் 00.00 - 2.00 (UTC) மட்டுமே நன்றாக இருக்கும். நாளைக்குள் சிலகோப்புகளை அனுப்புகிறேன். மின்னஞ்சலைக் காணவும். எதிர்நோக்கும்..--த*உழவன் 15:28, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
    • நாளை எந்நேரமும் கலந்துரையாடலாம், ஆனால் இங்கு நேரம் (பெலருஸ்) UTC +3.00 என்பதால் நீங்கள் குறிப்பிட்ட நேரப்படி (காலை 3.00 - 5.00 ) சாத்தியமாகுமா என்பது ஐயமே. எனினும் முயற்சிக்கின்றேன்..:) எனது இசுகைப்பு விபரம் srirajah7. --சி. செந்தி 15:50, 30

அக்டோபர் 2010 (UTC)

  • அப்படியென்றால் இந்திய நேரம்காலை 10.30மணிக்கு பிறகு உரையாடுவோம். அதாவது +5.00UTC. அந்நேரத்தில் பேச முடியவில்லையென்றால், எழுதி (கூகுள் அரட்டை அரங்கில்) சந்திப்போம்.--த*உழவன் 16:27, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • அம்மாவுடன் வெளியே செல்ல இருக்கிறேன். அதனால்இப்பொழுது உங்களை சந்திக்க இயலவில்லை. நாளை பார்ப்போம்.வணக்கம்--த*உழவன் 16:36, 30 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இப்பொழுது அரைமணி நேரம் கூகுள் மின்னஞ்சலுக்கு வர இயலுமா?--த*உழவன் 06:17, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • நீங்கள் புதிய சொற்களை AWB வழியாக உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் சொற்கள் பல ஏற்கனவே நம்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதனோடு இணைப்பு தந்து புதிய சொற்களைப் பதிவேற்றிட கேட்டுக்கொள்கிறேன். மற்றொன்று AWBசெயல்படுத்துவதற்கு முன் minor edit என்பதற்கு முன்னுள்ள சிறிய பெட்டியில் குறியீட்டினை மறவாமல் நீக்கவும். அப்படி நீக்கினால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் புசி என்ற முன்னொட்டு, பு என்று வரும். அப்படி செய்தால், இந்த பு என்பது புதியசொல் என்பதனை குறிக்கும். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் உள்ள 'சிறிய தொகுப்புகளை மறை' என்ற வசதியை பயன்படுத்தும் போது, இப்புதிய சொற்கள் மறையாது வழிவகுக்கும். நன்றி.--த*உழவன் 02:12, 1 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மற்றொன்று சொல்ல மறந்துவிட்டேன்.மேலுள்ள என்விருப்பத்தேர்வுகள் என்பதுள் சென்றால் , தொகுத்தல் என்ற தத்தல் இருக்கும். அதில் 8வதாக வருவதை(இயல்பிருப்பாக...சிறியது எனக் குறித்துக்கொள்) தெரிவு செய்யாதிங்க. அப்பொழுது தான் புசி வராது. ஆக மொத்தம் இரண்டு இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். அப்பொழுது தான் புசி வராது. நீங்க அனுப்பிய கோப்புகளை மேம்படுத்தியுள்ளேன். நாளை அனுப்புகிறேன். வெற்றியே. வணக்கம்.--த*உழவன் 18:42, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

இரசிய விக்சனரி[தொகு]

  1. அனைத்துச் சொற்களிலும் இரசிய விக்சனரியை இணத்தால் நன்றாக இருக்குமென பழ.கந்தசாமி கருத்து தெரிவித்திருந்தார்.உங்களின் கருத்தென்ன?
    நானும் அங்ஙனம் இணைக்கலாமென கருதுகிறேன்.
  2. பேச்சு:изумительныйஉங்களின் கருத்தென்ன?
  3. பகுப்பு பேச்சு:உருசியம்-எண்கள்உங்களின் கருத்தென்ன? ஆவலுடன் முடிக்கும். --த*உழவன் 07:07, 6 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • உங்களின் கருத்தறிந்தேன்.மகிழ்ச்சி.(எ. கா.) изумительный இருப்பது போல, அனைத்துச்சொற்களுக்கும் இரசிய விக்சனரியின் இணைப்பைத் தரலாமென நானும், கந்தசாமியும் கருதுகிறோம். உங்களின் கருத்தறிய ஆவல்.ஆம். எனில் வார்ப்புருவினை நாம் உருவாக்கி இணைக்கலாம்.--த*உழவன் 01:39, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • நானே இதனைப்பற்றி உங்களிடம் உரையாட நினைத்தேன், இரசிய ஆதாரமும் பயன்படுத்தப்படுவதால் இது அவசியமானது, வார்ப்புரு உருவாக்குதல் அவசியம். நன்றி.--சி. செந்தி 08:50, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

சொற்கூறுகள்[தொகு]

<big>'''{{PAGENAME}}'''</big>, {{பெயர்}} என்பதனை உங்கள் புதுச்சொல் உருவாக்கத்தின் போது, அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.

  1. இதில் <big>'''{{PAGENAME}}'''</big> என்பதனை {{பெரியது|'''{{PAGENAME}}'''}} என்றும் பயன்படுத்தலாம். இதனால் தமிழ், ஆங்கில விசைப்பலகை மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
  2. {{பெயர்}} வார்ப்புரு என்னால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே மயூரனாதன் {{பெயர்ச்சொல்}} உருவாக்கியுள்ளார். எனவே, வரலாறு கருதி இனி அதனையே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.--த*உழவன் 00:53, 17 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்.--சி. செந்தி 13:18, 17 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மாற்றங்கள்[தொகு]

பகுப்பு:உருசியம்-எண்கள் என்பதில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன்.(எ. கா.) ஆவது-->десятый , படங்கள், சொல்வளம், (எ. கா.) சொற்றொடர் --> один தொடர்ந்து செய்யவா? விரைவில் இம்மாதத்திற்குள் இரசிய-தமிழ் அகரமுதலியை மின்னூலாக மாற்றி அனுப்பிகிறேன். --த*உழவன் 07:47, 22 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • நன்றாக உள்ளது, தாராளமாகச் செய்யுங்கள் த*உழவன், என்னிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை எனக் கருதுகிறேன் :) , ஏதேனும் பிழைகள் இருப்பின் எனது கவனிப்புப் பட்டியலை அவதானிப்பதன் மூலம் திருத்துகிறேன். உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது, நன்றியும் பாராட்டுக்களும்..--சி. செந்தி 21:25, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

один உள்ளது போல சொற்றொடர்களை இணைப்பதில் தான் சற்று சிரமம் ஏற்படுகிறது. முடிந்தால் புதிய சொற்களை உருவாக்கும் போது, அவற்றினை இணைக்க வேண்டுகிறேன்.ஓங்குக தமிழ் வளம்! வணக்கம்--த*உழவன் 02:15, 24 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மின்னூல்-இரசியதமிழ் அகரமுதலி[தொகு]

உங்கள் மின்னஞ்சல் காணவும்.சில பிரதிகளை அனுப்பிபயுள்ளேன்--த*உழவன் 02:25, 4 டிசம்பர் 2010 (UTC)

கண்டேன் உங்களுக்கு மறுமொழி அனுப்பியுள்ளேன்; நன்றி.--சி. செந்தி 20:02, 6 டிசம்பர் 2010 (UTC)

மின்னூலாக்கப் பணிகள் முடிவடைந்தவுடன் தெரிவிக்கிறேன். கோப்புகளை தெளிவுப்படுத்தவே நேரம் அதிகமாகிறது.பாதி வேலை(மொத்த பக்கங்கள்-256) நிறைவடைந்துள்ளது. --த*உழவன் 01:06, 7 டிசம்பர் 2010 (UTC)

வேற்றுமை உருபுகள்[தொகு]

sanguis என்ற பக்கமானது தங்களது முயற்சிகளுக்கு உதவலாம். வணக்கம்--த*உழவன் 01:39, 26 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நன்றி, ஆனால் இதனை AWB மூலம் பதிவேற்றம் செய்யமுடியாது போலுள்ளதே.--சி. செந்தி 01:15, 15 பெப்ரவரி 2011 (UTC)
  • எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.எனினும், அட்டவணையின் பொதுவான உட்கூறுகளை மட்டும் தானியக்கமாகப் பதிவேற்றலாமென எண்ணுகிறேன்.பிறகு, தேவையானவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ் விடத்தில் வினவுங்கள். நான் அறிந்தது மிகக்குறைவே. இதுவரை இத்தகையத் தேவையில்லாததால், கற்கவில்லை.நேரம் கிடைக்கும் போது, அனுப்பிய அகரமுதலியிலிருந்து, அட்டவணைச் செயலியில் குறிப்பெடுக்க வேண்டுகிறேன். பின்பு, சிறுமாற்றம் செய்து, பதிவேற்றி விடலாம். நூலகப் பணிகளில் ஆர்வமுடையவனாக இருப்பதால், முன்புவிட, இங்கு குறைவாக வருகிறேன்.--த*உழவன் 01:59, 15 பெப்ரவரி 2011 (UTC)

இன்சுலின் விளக்கம் - சரி பார்க்கவும்[தொகு]

செந்தி, Eldiaar அவர்கள் insulin பக்கத்தில் விளக்கம் சேர்த்துள்ளார். அதைச் சரி பார்க்குமாறு கேட்டுள்ளார். மருத்துவர் என்ற முறையில் அதற்குப் பொருத்தமானவர். நன்றி. பழ.கந்தசாமி 21:40, 12 மார்ச் 2011 (UTC)

  • பார்த்தேன், சில திருத்தங்கள் செய்யலாம், பின்னர் செய்கின்றேன்.--சி. செந்தி 16:51, 13 மார்ச் 2011 (UTC)
  • செந்தி, நன்றி. பொருளும் விளக்கமும் பொருத்தமாக இருக்கிறது . அதை நீங்களை பக்கத்தில் சேர்த்துவிடுங்களேன். பழ.கந்தசாமி 20:10, 21 மார்ச் 2011 (UTC)

விக்சனரி நிருவாகி தேர்தலில் வாக்களிக்க வேண்டல்[தொகு]

வணக்கம். நடைபெறும் விக்சனரி நிருவாகி தேர்தலில் தங்கள் வாக்கு அல்லது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 06:50, 4 மே 2011 (UTC)[பதிலளி]

இரசியப் பகுப்புகளில் விக்கியிடையிணைப்பு ஐயம்[தொகு]

இரசியப் பகுப்புகள் உருவாக்கும் போது, ஒரு முறை ஆங்கில விக்சனரியில் இருக்கும் பகுப்புகளைக் காணவும். பின்பு, அங்குள்ள விக்கியிடைப்பகுப்பு இணைப்புகளையும், இங்கு உருவாக்கும் பகுப்பிலும் இணைக்கக் கோருகிறேன். ஏனெனில், உங்கள் உழைப்பை, பிற மொழி விக்சனரியர்களும் காண இது வழிவகுக்கும். தற்போது இயங்கும் விக்கியிடைத் தானியங்கிகள், சொற்களை மட்டுமே சிறப்பாக இணைக்கும். அச்சொற்களுக்குரியப் பகுப்புகளை, சரிவர இணைப்பதில்லை என்பதால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

நான் பகுப்பு:உருசியம்-பெயர்ச்சொற்கள் என்பதில், அத்தகைய விக்கியிடைப் பகுப்பு இணைப்புகளை இங்கும், ஆங்கிலவிக்சனரியிலும் உருவாக்கினேன்.

ஆனால்,பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் உருவாக்கும்போது, சிறுகுழப்பம் என்னுள் எழுந்துள்ளது. ஆங்கில விக்சனரியில் Russian adjectives , Russian adverbs என உள்ளன. இதில் Russian adjectives என்பதிலுள்ள, விக்கியிடைப் பகுப்பு இணைப்புகளை, .பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் என்பதில் சேர்த்துள்ளேன். அது சரியா? அல்லது பகுப்பு:உருசிய பெயர் உரிச்சொற்கள் என்பதில் சேர்க்க வேண்டுமா? Russian adverbs என்பதன் விக்கியிடை பகுப்பு இணைப்புகளை, பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதில் சேர்க்கலாமா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஆங்கில விக்சனரியில் இரசியச் சொற்களைப் பகுத்திருப்பது சரியான முறையா? ஐயம் தீர்க.--05:48, 13 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

-அவற்றில் மாற்றம் தேவைதான், பகுப்பு:உருசியம்-உரிச்சொற்கள் என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்,
Russian adjectives = பகுப்பு:உருசிய பெயர் உரிச்சொற்கள் ;
Russian adverbs = பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் ;
இங்கு பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதற்கு செல்வா பயன்படுத்திய பகுப்பு:உருசியம்-வினையடைகள் என்பதையே பயன்படுத்துகின்றேன், எனவே பகுப்பு:உருசிய வினை உரிச்சொற்கள் என்பதை நீக்கலாம்.
அதற்கு முன்னர் பொதுவாகவே.. உரிச்சொல் என்பதற்குள் பெயர் உரிச்சொல், வினையடை அடங்குமா அல்லது பெயர் மட்டும்தானா என்பது அறிந்து பகுப்பு:உரிச்சொற்கள் சீர் படுத்தவேண்டிய தேவை உள்ளது.
நான் அறிந்தவரை முன்னர் வினையெச்சம் என்றே படித்ததாக நினைவு. இக்காலத்தில் வினையடை என்று பயன்படுத்தப்படுகின்றது. அப்படியாயின் பெயர் உரிச்சொல்லும் பெயரடை என்றல்லவா பயன்படுத்தவேண்டும், எனவே // பெயர் உரிச்சொற்கள், வினை உரிச்சொற்கள் // என்று அல்லது // பெயரடை, வினையடை // என்று பயன்படுத்தல் வேண்டியது என்று கருதுகிறேன். இலக்கணம் நன்கு தெரிந்தோர் இதனை விளக்கினால் அனைத்து விக்சனரிச் சொற்களுக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம். (இவ்வுரையாடல் இங்கும் பதியப்பட்டுள்ளது)--சி. செந்தி 17:09, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]

the edit summary[தொகு]

இங்கு மேலுள்ள தலைப்பில், ஒரு வசதியைக் கோரியுள்ளேன். நீங்களும் ஆமோதித்தால் நன்றாக இருக்கும்.--16:52, 27 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Drsrisenthil,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். (படிமம்:Hyperopia-presbyopia-and-myopia-distinguish.jpg) முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:36, 3 சூலை 2014 (UTC)படிமம்:Hyperopia-presbyopia-and-myopia-distinguish.jpg[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil&oldid=1240999" இலிருந்து மீள்விக்கப்பட்டது